Young Look Food: 40 வயதில் 30 வயதுக்கான தோற்றத்தை பெற இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்கள்

40 வயதை எட்டிய உங்களுக்கு 30 வயதை இளமை தோற்றத்தை பெற வேண்டும் என்றால் நிபுணர் கூறும் இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்

young look indian  card

முதுமையின் தாக்கம் முதலில் சருமத்தில் தெரியும். எனவே, சருமம் பொலிவாகவும் இளமையாகவும் இருக்க சரியான வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியமான உணவு முறையும் அவசியம். வயதான எதிர்ப்பு பண்புகள் நிறைந்த உணவுகள் கொலாஜனை அதிகரிக்கும். கூடுதலாக வைட்டமின்கள் சி, ஈ மற்றும் அமினோ அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புகள் போன்ற பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

ஆரோக்கியமான் உணவுகளை சாப்பிடுவதால் சருமம் பெரிதும் பயனடைகிறது. சில உணவுகளில் மற்றவற்றை விட அதிக வைட்டமின்கள் உள்ளதால் எலாஜிக் அமிலம் மற்றும் இயற்கை கொலாஜன் பூஸ்டர்களாக இருக்கிறது. நல்ல உணவை உட்கொள்வதன் மூலம் சருமம் இயற்கையாகவே பளபளக்கும். வைட்டமின்-சி நிறைந்த உணவுகள் முதுமையை குறைக்கிறது.

புதினா

mint leaf

வைட்டமின்-ஏ புதினாவில் ஏராளமாக உள்ளதால் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். இது முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை அகற்றுவதன் மூலம் சருமத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, புதினா இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட் ரோஸ்மரினிக் அமிலம் இருப்பதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் சருமத்திற்கு நன்மை பயக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும்.

பாகற்காய்

bitter gaurd

பாகற்காய் நீரில் கரையக்கூடிய வைட்டமின்-சி, லிபோபிலிக் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பல்வேறு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நாவல் பழங்கள்

jammu fruit

நாவல் பழங்களில் உள்ள எலாஜிக் அமிலகள் சருமத்தில் உள்ள மந்தமான தன்மை, அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைத்து சருமத்தை பளபளக்கச் செய்கிறது. கூடுதலாக இது புற ஊதா சேதத்தை குறைக்கிறது மற்றும் ஈரப்பதத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை பாதுகாக்கிறது.

நெல்லிக்காய்

Gooseberry young look

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காய் சாறு சருமத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும். ஆம்லா சாறு ஒரு இயற்கை சுத்தப்படுத்தியாகும். இது இறந்த சரும செல்களை அகற்றி, வயதானதை தடுக்க உதவுகிறது. நெல்லிக்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் வீக்கத்தை எதிர்த்துப் போராடுகின்றது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின்-சி சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரிக்கிறது. அதனால்தான் அதன் சாறு குடிப்பது நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

வெள்ள பூசணிக்காய்

வெள்ள பூசணிக்காய் உள்ள வைட்டமின்-ஈ, ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாத்து, சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றுகிறது. மேலும், வெள்ள பூசணிக்காய் உள்ள வைட்டமின்-இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து சரும வறட்சியை நீக்கி மென்மையாக்குகிறது. வெள்ளை பூசணிக்காயில் மினரல்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நாட்களில் தாங்கமுடி வலியை அனுபவித்தல்.. இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!!

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit- Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP