Food And Alcohol: மது அருந்தும்போது சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள்

மது அருந்துவதால் பல விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்தும் என்றாலும், அதனுடன் இணைத்து சாப்பிடக்கூடிய சில உணவுகள் நன் உடல்நிலையை மோசமடைய செய்யும். 

 
Achol with big

சில உணவுகளை ஆல்கஹால்வுடன் ஜோடி சேர்த்து சாப்பிட்டால் உடல் நிலைக்கு தீங்கு விலைவிக்கும். சில உணவுகள் ஆல்கஹால் சேரும் போது ஜீரணிக்க உடல் விரும்புகிறது, ஆனால் சில உணவுகள் ஜூரணிக்க உதவுவதில்லை. மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பட்டிலை பார்க்கலாம்

பீர் மற்றும் ரொட்டி

bread with alchoal

பீர் மற்றும் ரொட்டி இணைத்து சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த இரண்டு உணவுகளும் ஒன்றாய் சேரும் போது உடலில் நீரிழப்பு அதிகமாக இருக்கும். பீர் மற்றும் ரொட்டியில் அதிக அளவு ஈஸ்ட் இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் போது கல்லீரல் சரியாக செயல்பட முடியமால் இருக்கும். மேலும் செரிமான பிரச்சினைகள் அல்லது வீக்கம் ஏற்படலாம்.

சாக்லேட்டுகள்

சாக்லேட் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும். அதை மதுவுடன் இணைத்து சாப்பிடுவது குடல் புறணிக்கு தீங்கு விளைவிக்கும். இரைப்பை குடல் பிரச்சினைகளை தூண்டும் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். சாக்லேட்டில் காஃபின் மற்றும் கோகோ இரண்டும் உள்ளதால் வயிற்றுப் பிரச்சனைகளை அதிகப்படுத்தி தொடர்ந்து பசியை உண்டாக்கும்.

பீட்சா

pizza with alchoal

பீட்சாவும் மதுவும் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணிக்க முடியாது மற்றும் வயிற்றில் வலி அசௌகரியம் ஏற்படலாம். கூடுதலாக பீட்சா இதய நோய் மற்றும் எடை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

பால் பொருட்கள்

பாலாடைக்கட்டி, பால், ஐஸ்கிரீம், இனிப்பு, வெண்ணெய் மற்றும் தயிர் போன்ற பால் உணவுகளை மது அருந்துவதற்கு முன்பும் பின்பும் தவிர்க்க வேண்டும். வயிற்றில் ஆல்கஹால் மற்றும் பால் பொருட்கள் ஒன்றாக எடுத்துக்கொள்வதால் தொற்று, வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.

காரமான உணவுகள்

spicy with alchoal

மதுவுடன் காரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றை சீர்குலைத்து செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். காரமான உணவுகள் வயிற்றைக் காலியாக்கும் செயல்முறையைத் தாமதப்படுத்தி அமில வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. நீங்கள் சிட்ரஸ் பழங்களை கூடுதலாக சாப்பிட்சால் இன்னும் இந்த நிலை தீவிரமடையும்.

இந்த பதிவும் உதவலாம்: மார்பகங்கள் நச்சுன்னு அழகாக தெரிய அளவை அதிகரிக்கும் உணவுகள்

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit- Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP