herzindagi
benefits of yoni mudra for women health

Mudra for Strong Uterus : பெண்களின் கருப்பை வலுப்பெற, கருப்பை கட்டிகளை தடுக்க இதை தினமும் செய்யுங்கள்!

கருப்பையை ஆரோக்கியமாக இருந்தால் கருத்தரிப்பதும் எளிதாகும். இதற்கு உதவக்கூடிய ஒரு முத்திரையை இன்றைய பதிவில் பார்க்கலாம்...
Editorial
Updated:- 2023-07-04, 15:44 IST

பெண்கள் தங்களுடைய கருப்பையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். கருப்பை பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதன் மூலம் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை சார்ந்த பல பிரச்சனைகளை தடுக்கலாம். நார்த்திசு கட்டிகள், தொற்று, பாலிப், போன்ற கருப்பை சார்ந்த சார்ந்த பிரச்சனைகளை தடுத்திட இப்பதிவில் பகிரப்பட்டுள்ள குறிப்பு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 

பெண்களின் கருப்பையை வலுப்படுத்தக்கூடிய ஒரு முத்திரையை உடற்பயிற்சி நிபுணரான ஜூஹி கபூர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

இந்த பதிவும் உதவலாம்: தலைவலியை போக்கும் ஐந்து மூலிகைகள்

 

சக்தி முத்திரை என்ற வார்த்தை பெண்ணின் உடலில் உள்ள ஆற்றலை குறிக்கிறது. இந்த முத்திரை பெண்களின் இனப்பெருக்க அமைப்பை வலுப்படுத்தும். இந்த முத்திரை செய்வதற்கான சரியான முறை மற்றும் அதன் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

சக்தி முத்திரை செய்முறை

yoni mudra for fertility

  • இதை செய்வதற்கு முதலில் சம்மணம் போட்டு தரையில் உட்காரவும்.
  • இப்போது இரு கைகளின் கட்டை விரலையும் மடக்கி உள்ளங்கை மீது வைக்கவும்.
  • அடுத்ததாக ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரலை மடித்து கட்டை விரலின் மீது வைக்கவும். இதை இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும்.
  • பின்னர் இரு கைகளின் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல்களின் முனையை ஒன்றாக சேர்த்து வைக்கவும்.  
  • உங்கள் கைகளை மார்பு அல்லது தொப்புளுக்கு நேராக வைக்கலாம். நீங்கள் விரும்பினால் மலாசனை தோரணையை செய்து இந்த முத்திரையையும் வைக்கலாம்.
  • இந்த முத்திரையை தினமும் 3-5 நிமிடங்கள் செய்துவர பெண்களின் கருப்பை வலுப்பெறும்.

சக்தி முத்திரையின் நன்மைகள்

yoni mudra for strong uterus

  • மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்
  • கருப்பை ஃபைப்ராய்டு கட்டிகளை தடுக்கலாம்.
  • ஹார்மோன்களை சம நிலையாக வைத்துக் கொள்ள உதவும் 
  • PCOS மற்றும் எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகளை குறைக்கும்.
  • கருப்பையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்தும். 

இதனுடன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தும் விடுபடலாம். இது உங்கள் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதனால் நேர்மறையான எண்ணங்களும் அதிகரிக்கும். இத்தகைய நன்மைகளுடைய முத்திரையை கட்டாயமாக நீங்களும் செய்து பயன்பெறுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: கோடையில் கொழுப்பை ஈஸியா குறைக்கலாம், இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com