சரும பராமரிப்பு என்பது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் பின்பற்றக் கூடியது அல்ல. இதனை தொடர்ச்சியாக ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளும் போது தான் அதற்கான முழு பயனும் நமக்கு கிடைக்கும். ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் சரும பராமரிப்பு முறையை பின்பற்றுகின்றனர்.
மேலும் படிக்க: கருவளையங்களை போக்க சிம்பிள் தீர்வு; இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றலாம்
சிலர் இயற்கையான முறையில் சரும பராமரிப்பை அமைத்துக் கொள்ள வேண்டும் விரும்புகின்றனர். அதனடிப்படையில் பீட்ரூட் கொண்டு நமது சருமத்தை எப்படி இயற்கையாக பொலிவு பெறச் செய்யலாம் என்று இதில் காண்போம்.
இதற்காக பீட்ரூட் ஐஸ் கட்டிகள் தயாரித்து பயன்படுத்தலாம். அதற்கு, ஃப்ரெஷ்ஷான பீட்ரூட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கும் மண் மற்றும் அழுக்கு அனைத்தும் சுத்தமாக நீங்கும் வகையில் கழுவிக் கொள்ளலாம். அதன் பிறகு, வெளிப்புறத் தோலை சீவி விட்டு மிக்ஸியில் அரைப்பதற்கு ஏற்ற வகையில் சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இதனை நன்கு அரைத்த பின்னர் ஒரு மெல்லிய சுத்தமான துணியை கொண்டு வடிகட்டி சாறு எடுக்க வேண்டும். இப்போது நமது பீட்ரூட் ஐஸ் கட்டிக்கு தேவையான மூலப்பொருள் தயாராகி விட்டது. இத்துடன் பன்னீர் மற்றும் கற்றாழை ஜெல் அல்லது தேன் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதற்கடுத்து சுத்தமான ஐஸ் ட்ரேயில் இந்த பீட்ரூட் சாறு கலவையை ஊற்றி, அதனை ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். இது இரவு முழுவதும் உறைந்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க: Chia seed: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இந்த 5 சியா விதை ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்
இந்த உறைந்த பீட்ரூட் ஐஸ் கட்டிகளை எடுத்து உங்கள் முகத்தில் வட்ட வடிவமாக சுமார் ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக தேய்க்க வேண்டும். இதன் பின்னர், இந்த சாறு சுமார் 10 நிமிடங்களுக்கு உங்கள் முகத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இறுதியாக உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை பயன்படுத்தவும்.
இவ்வாறு தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தினால் உங்கள் முகம் பார்ப்பதற்கு பொலிவாக காட்சி அளிக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com