benefits of surya namaskar for womens health

பெண்கள் ஏன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் தெரியுமா?

பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள இந்த ஒரு யோகாசனத்தை பயிற்சி செய்தால் போதும். சூரிய நமஸ்காரத்தின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…
Editorial
Updated:- 2023-06-16, 10:36 IST

12 தோரணைகளை உள்ளடக்கிய இந்த ஆசனம் செய்வதன் மூலம் பல உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கலாம். இதற்கு சூரியன் நமஸ்காரத்தை சரியான முறையில் செய்ய வேண்டும். பெண்கள் தங்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சூரிய நமஸ்காரம் செய்யலாம்.

சூரிய நமஸ்காரத்தின் 12 தோரணைகளையும் ஒரு முறை செய்து முடிக்க 3-4 நிமிடங்கள் வரை ஆகலாம். உங்கள் பயிற்சியின் அளவை பொறுத்து 6-7 இடங்கள் வரை நீளலாம். சூரிய நமஸ்காரத்தை செய்யும் பொழுது சுவாசிப்பதில் கவனம் செலுத்தினால் மட்டுமே முழு பலன்களையும் பெற முடியும். யோகா பயிற்சியாளர் ஆன ஸ்மிருதி அவர்களின் கருத்துப்படி, இந்த 12 தோரணைகளையும் சுவாசப் பயிற்சியுடன் 6 முறை செய்தால் போதுமானது. மேலும் 12 முறைக்கு மேல் செய்வதை தவிர்க்க வேண்டும் என நிபுணர் வலியுறுத்தியுள்ளார். சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: வெந்நீருடன் மிளகு கலந்து குடிப்பதால், உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

 

சரும ஆரோக்கியம்  

தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் முகம் மற்றும் சருமத்தின் பொலிவு கூடும். சூரிய நமஸ்காரத்தை தொடர்ந்து செய்து வர சுருக்கங்கள் மற்றும் ஆரம்ப கால வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கலாம். வயது கூடினாலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், சூரிய நமஸ்காரத்தை தினமும் செய்து பலன் பெறலாம். 

surya namaskar sun salutation poses

செரிமான மண்டலத்திற்கு நன்மை தரும் 

செரிமான மண்டலத்தில் ரத்த ஓட்டம் மேம்பட மற்றும் செரிமான செயல்முறை சீராக இருக்க சூரிய நமஸ்காரம் செய்யலாம். இதில் உள்ள சில தோரணைகள் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. இதை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் வாயு, மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

மன ஆரோக்கியத்திற்கு நல்லது 

உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சூரிய நமஸ்காரத்தை தவறாமல் செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கிறது. 

நரம்பு மண்டலம் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்

இந்த ஆசனத்தை பயிற்சி செய்வது உங்களை அமைதி படுத்தவும் கவலையிலிருந்து விடுபடவும் உதவும். மேலும் தைராய்டு பிரச்சனை உள்ள பெண்களுக்கும் சூரிய நமஸ்காரம் நன்மை தரும். 

மாதவிடாயை ஒழுங்குபடுத்தும்  

surya namaskar for women

சூரிய நமஸ்காரம் செய்வது மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது வயிற்று தசைகளை பலப்படுத்தவும் மாதவிடாய் வலியை குறைக்கவும் சிறந்தது. மாதவிடாய் அதிகாலையில் சீக்கிரம் எழுந்து, வசதியாக இந்த ஆசனத்தை செய்யலாம். இது மாதவிடாய் வலிக்கு நிவாரணம் தருவதோடு மட்டுமின்றி அதிகப்படியான உதிரப்போக்கையும் குறைக்கிறது. 

சூரிய நமஸ்காரத்தை சரியான முறையில் செய்தால் மிக சிறந்த பலன்களை பெற முடியும்.

 

இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் தொப்பை மற்றும் எடையை குறைப்பதற்கான ஆயுர்வேத தீர்வு!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com