
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பெரும்பாலான பெண்களின் உடல் எடை கணிசமாக அதிகரிக்க தொடங்குகிறது. ஏனெனில் பெண்கள் தங்களுடைய வீட்டு, அலுவலக வேலைகளில் பரபரப்பாக ஈடுபடும் பொழுது தங்களுடைய உடல் நலத்தில் அக்கறை செலுத்த மறந்து விடுகிறார்கள். உடற்பயிற்சி செய்ய நேரமின்மை, முறையற்ற தூக்க சுழற்சி, மன அழுத்தம் மற்றும் போஷாக்கு பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களினால் உடல் எடை அதிகரிக்கலாம்.
இதைத் தவிர ஹைபோ தைராய்டிசம், PCOS/PCOD, அதிக கலோரி உள்ள உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை சாப்பிடுவது, சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கலாம். உடல் பருமனால் அழகு பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி இது பல உடல் நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் பலவீனம் அடைவதற்கான காரணம் என்ன?
இந்த சூழலில் உடல் எடையை பராமரிக்க மருந்துகள் மற்றும் சப்ளிமெண்ட்கள் எடுத்துக் கொள்வது நல்லதா? இதற்கு பதிலாக ஆயுர்வேத முறையை பின்பற்றி உடல் எடை மற்றும் தொப்பையை சுலபமாக குறைக்க முடியும். இதற்கான குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான சீதாலி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நிபுணரின் கருத்துப்படி செரிமானம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு உடல் எடையை குறைப்பது சற்று கடினமாக இருக்கலாம். இருப்பினும் இதன் அறிகுறிகளை குறைப்பதன் மூலம் புத்துணர்ச்சியாகவும், ஆற்றலுடனும் செயல்படலாம். செரிமான செயல்முறை சீராக இருந்தால் உடல் எடையை குறைப்பது சுலபம் என நிபுணர் கூறியுள்ளார்.

காலையில் எழுந்தவுடன் உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தவும், மலச்சிக்கலில் இருந்து விடுபடவும், செரிமான செயல்முறையை மேம்படுத்தவும் வெந்நீர் குடிக்கலாம்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.
ஒரு கிளாஸுக்கு மேல் வெந்நீர் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
இந்த விதைகளின் கலவை உங்கள் செரிமான செயல்முறையை சீராக வைத்துக் கொள்ள உதவும். சுவை நிறைந்த இந்த கலவையை உணவிற்கு பிறகு சாப்பிட்டால் திருப்தியான உணர்வை பெறுவீர்கள்.
எள், ஓமம் மற்றும் சோம்பு விதைகளை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இதனை வறுத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதிலிருந்து ஒரு ஸ்பூன் விதை கலவையை உணவிற்கு பிறகு எடுத்துக் கொள்ளவும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த இந்த பச்சை பயிறு சுவை நிறைந்ததும் கூட. இது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பச்சை பயிறை சில மணி நேரங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும். இதனை வேக வைத்து சுண்டலாக சாப்பிடலாம்.

செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க நம் சமையலறையில் இருக்கும் மசாலாக்களே போதுமானது. இது உடல் பருமன், PCOD, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளுக்கு நன்மை தரும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தண்ணீருடன் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பின்னர் இதனை வடிகட்டி குடிக்கலாம்.
செரிமான செயல்முறை சீராக இருக்க மைதா போன்ற உணவுப் பொருட்களை தவிர்த்திடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் இதனுடன் இப்பதிவில் பகிரப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றினால் 21 நாட்களில் நல்ல மாற்றங்களை காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 3 எளிய குறிப்புகள்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com