
அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறதா? இதற்கு மோசமான எதிர்ப்பு சக்தியும் ஒரு காரணமாக இருக்கலாம். அடிக்கடி நோய்வாய்ப்படும்போது அன்றாட செயல்முறைகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி உடலும் பலவீனமடையலாம். இந்நிலையில் உங்கள் ஆரோக்கியத்தை பேணிக் காத்திட எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நம் வீட்டில் சமையலறையில் உள்ள ஒரு சில பொருட்களைக் கொண்டு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.
தினமும் காலையில் வெந்நீருடன் சிறிதளவு மிளகு பொடி கலந்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். இதை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வர பல உடல் நல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 3 எளிய குறிப்புகள்!
ஒரு கிளாஸ் வெந்நீருடன் ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக படித்து தெரிந்து கொள்வோம்.

மிளகு தண்ணீர் குடிப்பது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இது உடலின் செல்களுக்கு போஷாக்கு அளித்து, அவை சேதமடைவதை தடுக்கிறது. இது பருவ கால பாதிப்புகள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
மிளகு தண்ணீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வயிறு சுத்தமாகவும் நச்சுகள் அற்றதாகவும் இருந்தால் குடலும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த அதிசய நீர் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் செரிமான செயல்முறை சீராக இருக்கும். மேலும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெந்நீருடன் சிறிதளவு மிளகு பொடி சேர்த்து காலையில் குடிக்கலாம். இக்கலவையானது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து செரிமானத்திற்கும் உதவுகிறது. இது காலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மிளகு பொடி மற்றும் வெந்நீர் கலவையானது உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த நன்மைகளை தரும். இது சரும செல்களில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கிறது. மேலும் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படவும், சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கவும் இது உதவும்.
நாள்பட்ட மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இந்த நீர் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இதை குடிப்பதால் வயிற்றில் உள்ள கழிவுகள் வெளியேறி வயிறு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

காலையில் வெறும் வயிற்றில் மிளகு தண்ணீர் குடிப்பதால் உடலின் ஆற்றல் மட்டும் இரட்டிப்பாகும். இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும்.
இந்த நீரை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறி, உடல் நீரேற்றமாக இருக்கும். இதை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து குடித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படுவதுடன் சரும பொலிவும் அதிகரிக்கும்.
ஆயுர்வேத மருத்துவர் பூஜா கோலி அவர்களின் கருத்துப்படி வெந்நீருடன் சிறிதளவு மிளகு பொடி கலந்து ஒரு மாதத்திற்கு குடித்து வந்தால் உடலில் பல நல்ல விளைவுகளை காணலாம். இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சுவாச பாதையின் ஆரோக்கியம் மற்றும் மூட்டுகளை பராமரிக்கின்றன. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கும், சுவாச பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். ஆனால் ஒரு சிட்டிகை மிளகு பொடி மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை அதிகமாக எடுத்துக் கொள்வதால் அசிடிட்டி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே அளவோடு உண்டு பயன்பெறுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: தலை வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற இந்த இரு குறிப்பு மட்டுமே போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com