three exercises to regulate period

Irregular Periods : மாச கணக்கில் பீரியட்ஸ் வரவில்லையா? நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த 3 பயிற்சிகளை செய்யுங்கள்!

பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடிய 3 எளிய பயிற்சிகளை நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்வோம்…
Editorial
Updated:- 2023-06-15, 15:58 IST

சராசரியாக ஒரு பெண்ணினுடைய மாதவிடாய் சுழற்சி 28-35 நாட்களுக்குள் நடைபெற வேண்டும். மன அழுத்தம், பயணம், இடமாற்றங்கள் போன்ற சில காரணங்களால் ஒரு சில மாதங்கள் மாதவிடாய் தள்ளிப் போவது இயல்பானது தான். ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் தொடரும் பொழுது கட்டாயமாக மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டும். இதற்குப் பின் தைராய்டு, நீர் கட்டி, ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை தொடங்க வேண்டும்.

ஒழுங்கற்ற மாதவிடாய் தீர்வு: மாதவிடாய் சுழற்சியை சீராக்க மருத்துவ ஆலோசனையுடன் உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது போன்ற ஒரு விஷயங்களை கடைப்பிடித்தால் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும். அந்த வகையில் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக வர, ஒரு சில எளிமையான பயிற்சிகளை செய்து பயன்பெறலாம். இது குறித்த தகவல்களை சித்த மருத்துவரான யோகா வித்யா அவர்கள் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

 

இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான முறையில் தொப்பை மற்றும் எடையை குறைப்பதற்கான ஆயுர்வேத தீர்வு!  

 

நிபுணர் பரிந்துரை செய்த அந்த 3 பயிற்சிகளை இன்றைய பதிவில் பார்க்கலாம். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படும் பெண்கள் இந்த மூன்று பயிற்சிகளையும் செய்து பயன் பெறுங்கள். 

தோப்புக்கரணம் 

irregular menstruation thopuukaram

பெண்கள் தோப்புக்கரணம் போடும்போது அவர்களுடைய எண்டோகிரைன் சுரப்பி சிறப்பாக செயல்படும். இதனால் ஹார்மோன்கள் சமநிலை அடைந்து, மாதவிடாய் சுழற்சியும் சீராக இருக்கும். தோப்புக்கரணம் போடுவதற்கான சரியான முறையை இப்போது பார்க்கலாம். 

  • முதலில் உங்கள் கால்களை தோள்பட்டையின் அளவுக்கு விரித்து நிற்க வேண்டும். 
  • அடுத்ததாக உங்களுடைய இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்கவும். 
  • இவ்வாறு பிடிக்கும் பொழுது கட்டை விரல் வெளிப்புறத்திலும் ஆள்காட்டி விரல் உட்புறத்திலும் இருக்க வேண்டும். 
  • தலையை நேராக வைத்து மூச்சை உள்ளிழுக்கவும். 
  • உங்களால் முடிந்தவரை உட்காரவும். பின்பு காற்றை வெளியிட்டவாறே மேலே எழுந்து நிற்கவும். 
  • குறைந்த எண்ணிக்கையில் தொடங்கி, பின்பு கணிசமாக எண்ணிக்கைகளை அதிகரித்துக் கொள்ளலாம்.  

ஹிப் ரொட்டேஷன்  

irregular menstruation hip rotation

இந்த உடற்பயிற்சி இடுப்பு பகுதியை செயல்படுத்துகிறது. இந்த பயிற்சியை செய்வதால் சினைப்பைக்கு நல்ல அளவு ஆக்சிஜன் சென்றடையும். இது உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் என நிபுணர் குறிப்பிட்டார். 

  • இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின் கால்களை சற்று இடைவெளி விட்டு தள்ளி வைத்து கொள்ளவும். 
  • இப்போது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். இதை ஒரு சில வினாடிகள் செய்த பிறகு வலம் இருந்து இடமாக சுற்றவும். 
  • அடுத்ததாக நேராக நின்றபடி உங்கள் முழு இடுப்பையும் கிளாக் வைஸ் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் திசையில் சுற்றவும். 
  • இடுப்புப் பகுதியை ஈடுபடுத்தும் இந்த ஹிப் ரொட்டேஷன் பயிற்சி உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும். 

பட்டர்ஃபிளை போஸ் 

irregular menstruation butterfly

இந்த பட்டர்ஃபிளை போஸ் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொள்ளும் பெண்கள் இந்த ஆசனத்தை செய்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கலாம். 

  • இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் கால்களை நீட்டி நேராக தரையில் உட்காரவும். 
  • பின்பு உங்கள் இரு கால்களையும் மடக்கி பாதங்களை ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். 
  • உங்கள் கைகளால் கால்களின் விரல்களை பிடித்துக் கொள்ளவும். இவ்வாறு பிடித்துக்கொண்டு முட்டியை பட்டாம்பூச்சியை போல மேலும் கீழுமாக அசைக்கவும். 

உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக்க நிபுணர் பரிந்துரை செய்த இந்த மூன்று ஆசனங்களை பயிற்சி செய்யுங்கள்.  

 

இந்த பதிவும் உதவலாம்: வெந்நீருடன் மிளகு கலந்து குடிப்பதால், உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்! 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம். 

image source:freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com