முதுமை என்பது இயற்கையின் ஓர் அங்கம். நமக்கு வயதாகும் போது, உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் பல நடக்கின்றன. இந்த மாற்றங்களில் மிகவும் முக்கியமானவை உடல் வலிமை, இயக்கம் மற்றும் சமநிலை குறைவது ஆகும். இந்த மூன்றும் ஒருவருக்கு சுதந்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இன்றியமையாதவை.
மேலும் படிக்க: உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகளை மேற்கொள்ளவும்
அதன்படி, முதுமையிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வாழ உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து இதில் பார்க்கலாம். குறிப்பாக, இவற்றை மேற்கொள்வதற்கு நாம் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சிகளை நம்மால் செய்ய முடியும்.
ஸ்குவாட் பயிற்சியானது தொடை, முழங்கால் உள்ளிட்ட தசைகளை வலுப்படுத்துகிறது. இது இடுப்பு மற்றும் கணுக்கால் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. அமர்வது, நிற்பது, பொருள்களை பாதுகாப்பாக தூக்குவது போன்ற அடிப்படை இயக்கங்களுக்கு உடலை பழக்க ஸ்குவாட் அவசியம் ஆகும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் முதுமையிலும் ஆரோக்கியமாக வாழலாம். முதலில் எடைகள் ஏதும் இன்றி இந்த பயிற்சியை செய்து, பின்னர் அது பழக்கப்பட்ட பின்னர் எடைகளை கொண்டு செய்யலாம்.
ஒரே நேரத்தில் மார்பு, தோள்பட்டை, ட்ரைசெப்ஸ் (Triceps) மற்றும் முக்கிய தசைகளை புஷ்-அப் வலுப்படுத்துகிறது. இவை, மேல் உடலின் வலிமை மற்றும் தாங்கும் திறனை அதிகரிக்கிறது. இவற்றை தொடர்ந்து செய்வதன் மூலம் எடை அதிகமான பொருட்களை தூக்குவது போன்ற அன்றாட பணிகளை நாம் எளிதாக செய்யலாம். மேலும், இவை மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றன. உடல் சமநிலையுடன் நேராக நிற்க முக்கியமான தசைகளையும் இது வலுப்படுத்துகிறது. உங்கள் உடற்பயிற்சி மற்றும் தேவைகளுக்கு ஏற்ற பல வழிகளில் இந்த பயிற்சியை செய்யலாம்.
மேலும் படிக்க: Weight loss tips: உடல் எடை குறைப்பு; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில எளிய ரகசியங்கள்!
இது பிடிமான வலிமை மற்றும் மேல் உடலின் இழுக்கும் திறனை அதிகரிப்பதற்கு மிகவும் நல்லது. அன்றாட வாழ்க்கையில் பல இழுக்கும் செயல்பாடுகள் இருப்பதால், செயல்பாட்டு வலிமைக்கு (Functional Strength) புல்-அப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வலுவான தோள்களை பராமரிக்கவும், வயதாகும் போது கூன் விழுவதை தடுக்கவும் இவை உதவுகின்றன. இதன் மூலம் நாம் வலிமையாக உணரலாம்.
இந்த பயிற்சியில் வயிற்று தசைகள், கீழ் முதுகு மற்றும் தோள்கள் ஆகியவை வலிமையாகும். இது வலுவான முக்கிய தசைகளின் சமநிலையை மேம்படுத்துகிறது. மேலும், உடல் அசைவின் போது முதுகெலும்பை நிலையாக வைக்கிறது. இது முதுகு வலியை குறைக்கிறது. கூடுதலாக, மற்ற உடற்பயிற்சிகளின் செயல்திறனை அதிகரிக்கிறது. தினமும் ஒருமுறை மட்டும் இந்த பயிற்சியை செய்தாலும், அது தாங்கும் திறனையும், ஒட்டுமொத்த உடல் நிலைப்புத்தன்மையையும் வலுப்படுத்துகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com