Belly Fat Exercise in Tamil: 1 மாதத்தில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்

1 மாதத்தில் தொப்பையை குறைக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

over weight women

தொப்பை வர உடலில் மரபியல் காரணங்கள், உடல் எடை, கொழுப்பு, மோசமான உணவுப் பழக்கங்கள், ஒழுங்கற்ற தூக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவையும் முக்கிய காரணங்களாக உள்ளன. வயிற்றில் தொப்பை போடுவது ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது என்றால் அது மிகையல்ல. தொப்பை வர உடலில் மரபியல் காரணங்கள், உடல் எடை, கொழுப்பு, மோசமான உணவுப் பழக்கங்கள், ஒழுங்கற்ற தூக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவையும் முக்கிய காரணங்களாக உள்ளன. வயிற்றில் தொப்பை போடுவது ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் பாதிக்கிறது என்றால் அது மிகையல்ல.

பொதுவாக எடை தொடர்பான பிரச்சனைகளுக்கு யோகா ஒரு முழுமையான தீர்வு. யோகாசனங்களை செய்வதன் மூலம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமான முறையிலும் உடல் எடையை குறைக்கலாம். அதனால்தான் தொப்பையைக் குறைக்க உதவும் சில யோகாசனங்களை பற்றி இந்த பதிவில் உங்களுக்கு சொல்ல போகிறோம். உலக யோகா அமைப்பின் நிறுவனரும் யோகா மற்றும் ஆன்மீக குருவான ஹிமாலயன் சித்தா அக்ஷர் ஜி, தொப்பையை குறைக்க உதவும் யோகாசனங்களை பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். சில யோகாசனங்கள் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறிவைத்து, கலோரிகளை எரிக்கிறது. தசைகளை மிகவும் நெகிழ்வாக மாற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

தொப்பையினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்

அடி வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் எப்போதும் மந்தமான உணர்வை தரும். வயிறு பெரியதாக இருந்தால், சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
தொப்பையை குறைக்க உதவும் யோகாசனங்கள்

சதுரங்க தண்டாசனம்

  • இதை செய்ய முதலில் தரையில் புஷ் அப் நிலையில் படுக்கவும்.
  • மணிக்கட்டு மற்றும் முழங்கைகள் தரைக்கு இணையாக இருக்க வேண்டும்.
  • தோள்களை உள்ளே தள்ளி உடலை நேர்கோட்டில் நிறுத்தவும்.
  • இதே நிலையில் 10 முதல் 15 வினாடிகள் இருக்கவும்.

belly fat

ஹலாசனம்

  • இதை செய்ய முதலில் தரையில் மல்லாந்து படுக்கவும்.
  • பின்பு இரு கைகளையும் உடலின் இரு பக்கவாட்டிலும் நீட்டிக் கொள்ளவும்.
  • பின்னர் உள்ளங்கைகளை ஊன்றி, இரு கால்களையும் மடக்காமல் நேராக தூக்கி தலைக்கு பின்புறம் 90 டிகிரிக்கு கொண்டு வரவும்.
  • கால்கள் தரையை தொட வேண்டும்.
  • இப்போது சுவாசத்தை சீராக வெளியே விட்டு உள்ளே இழுக்கவும்.

belly fat workout

தனுராசனம்

  • தொப்பையை குறைக்க இந்த ஆசனம் உதவுகிறது.
  • இதை செய்ய முதலில் வயிறு தரையில் படும்படி படுக்கவும்.
  • ஆழ்ந்த மூச்சை உள்வாங்கி கைகளையும் கால்களையும் மேலே உயர்த்தவும்.
  • இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் வரை இருக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik, google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP