சில சமயங்களில் சோம்பல், சில நேரங்களில் வீட்டு வேலைகள், குழந்தைகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளின் காரணமாக, நம்மை நாமே கவனித்து கொள்ள முடியாமல் போகிறது. இந்த சூழலில், உடலில் உள்ள கொழுப்பு சத்தின் அளவு அதிகமாகி விடுகிறது. நம் கைகள், பின்புறம், கழுத்து, முகம், வயிறு மற்றும் தொடை ஆகிய கண்களுக்கு புலப்படும் பகுதியில் கொழுப்பு அதிகரிக்கும். உடல் எடையை ஏற்றுவது மிகவும் எளிது ஆனால் அதை குறைக்கும் போது, நம் உடலில் வியர்வை சிந்தி சிரமப்பட வேண்டும்.
நீங்கள் மனது வைத்தால் இரண்டே வாரங்களில் பத்து கிலோ எடையை குறைக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? நியூட்ரில்டூ நிறுவனர், உணவுக்கலை நிபுணர் இட்டூ ச்சப்ரா கூறுவது, "உடல் எடையை குறைக்க நாம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். நீங்கள் விதவிதமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உண்பதும் உங்கள் உடல் எடையை குறைக்கும். டாக்டர். இடூ ஒரு ஊட்டச்சத்து மிக்க உணவு முறை பட்டியலை வெளியிட்டுள்ளார். இதை உண்பதால் உங்களாலும் இரண்டே வாரங்களில் 7-10 கிலோ எடையை குறைக்க முடியும்.
இதவும் உதவலாம்: சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் இந்த ஆயுர்வேத பானத்தை குடிக்கலாம்
முதலில் காலையில் வெதுவெதுப்பான நீரை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி விடலாம். இதற்கு நீங்கள் வெந்தயம் மற்றும் இஞ்சி தண்ணீர் பருகலாம்.
உங்கள் மதிய உணவுக்கு அதிகமான சாலட்டுகள் சேருங்கள். பல நிறங்களில் காய்கறிகள் வைத்து உங்கள் சாப்பாடு தட்டை அலங்கரிக்கவும். இந்த ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
7-8 மணிக்குள் இரவு உணவை முடிக்க வேண்டும். இது உங்கள் செரிமானத்தை எளிமை ஆக்குகிறது. ஒரு வேளை நீங்கள் நீண்ட நேரம் விழித்திருந்தால், தூங்க செல்லும் 1 மணி நேரத்திற்கு முன் மஞ்சள் பாலை குடிக்க வேண்டும்.
இதுவும் உதவலாம்: சர்க்கரை நோய் மற்றும் பிற உடல் நல பிரச்சனைகளை விரட்டும் வெண்டைக்காய்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com