குளிர்காலம் ஆரம்பித்தவுடன் நாம் அனைவரும் ஆடைகளில் அதிக கவனம் செலுத்த தொடங்குகிறோம். அதற்கு காரணம், குளிர்காலத்தில் குளிர் மற்றும் பனி அதிகமாக இருக்கும் என்பதால் அதிலிருந்து உடலைப் பாதுகாத்து கொள்ள கனமான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிகிறோம். அதே சமயம், சிலருக்கு லேசான குளிர்காற்று வீசினால் கூட உடனே மூட்டு வலி வந்து விடும். அதற்கு என்ன காரணம்? என்பதை பிரபல முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார்.
குறைந்த அழுத்தம் கொண்ட காற்றோட்டத்திற்கும் மூட்டு வலிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். குளிர்ந்த காற்று வீசும்போது, காற்றின் அழுத்தம் குறைகிறது, இதனால் தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும் நல்ல சிந்தனைகள்
குளிர்காலத்தில் ஏன் மூட்டு வலி ஏற்படுகிறது? என்பதற்கு மற்றொரு காரணத்தை அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, முழங்கால் மூட்டு பகுதியில் இருக்கும் சினோவியல் என்ற திரவம் குளிர்காலத்தில் தடிமனாக மாறும். அப்போது மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்கிறார்.
சில சமயங்களில் உடலின் குறைவான நெகிழ்வு தன்மையால் மூட்டு வலி உண்டாகும். குளிர்காலத்தில் வழக்கத்தை விடவும் உடலின் நெகிழ்வுத் தன்மை குறைக்கிறது. இதன் காரணமாக மூட்டில் வலி ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார்.
குளிர் காலங்களில் இரவுகள் நீளமாகவும், பகல் பொழுது குறைவாகவும் இருக்கும். இதனால் பல நேரங்களில் நாம் உடற்பயிற்சியை முற்றிலுமாக தவிர்த்து விடுகிறோம். இதன் காரணமாக மூட்டு வலி பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சிலர் எந்நேரமும் அலுவலகத்திற்கு உள்ளே அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் அவர்கள் மீது சூரிய ஒளி படுவதில்லை. அதனால் அவர்களின் உடலில் வைட்டமின் D குறைபாடு ஏற்படுகிறது. அதனால் மூட்டு வலி தொடர்பான பிரச்சனைகள் வர தொடங்குகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எருச்சல் ஏற்படுகிறதா?
ஆகவே, குளிர்காலத்தில் மூட்டு வலி ஏற்படுவதற்கான காரணம் இப்போது உங்களுக்கு தெரிந்து இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com