herzindagi
arm fat reducing exercises

Arm Fat Exercise : கஷ்டமே இல்லை! கை சதை குறைய இந்த 3 பயிற்சிகளை செய்தால் போதும்!

கை சதை குறைய, குண்டான கைகளை ஸ்லிம்மாக மாற்றிட இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள மூன்று எளிய பயிற்சிகளை தினமும் பயிற்சி செய்யுங்கள்…
Editorial
Updated:- 2023-09-22, 07:00 IST

ஷார்ட் ஸ்லீவ்ஸ் அணிய குண்டான கைகள் ஒரு தடையாக உள்ளதா? கவலையை விடுங்க! கை பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைத்து, ஸ்லிம்மான கைகளை பெற ஒரு சில பயிற்சிகளை செய்தால் போதும். இதை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் சில நாட்களிலேயே நல்ல மாற்றங்களை காணலாம்.

 ஃபிட்னஸ் பயிற்சியாளரான சரத் சர்மா அவர்களின் கருத்துப்படி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைப்பது சற்று கடினமாக இருக்கலாம். குறிப்பாக உடலின் குறிப்பிட்ட பகுதிகள் கொழுப்பு சேரும்பொழுது அவற்றை குறைப்பதற்கான பிரத்தியேக பயிற்சிகளை செய்ய வேண்டும். உதாரணமாக நீங்கள் கைப்பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைக்க விரும்பினால் கை தசைகளை ஈடுபடுத்தும் பயிற்சிகளை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் குண்டான கைகளை ஸ்லிம்மாக மாற்ற உதவும் மூன்று பயிற்சிகளை  ஃபிட்னஸ் பயிற்சியாளரான சரத் சர்மா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம். அதற்கு முன் சில முக்கிய குறிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இரவில் மஞ்சள் பால் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்பை குறைப்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக ஒட்டுமொத்த உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தும் படி நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எடை இழப்பு மற்றும் தசையை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகள் பசி உணர்வை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது.  உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும்.

கைப்பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்க கார்டியோ பயிற்சிகளை செய்யலாம். இது கலோரிகளை குறைக்க உதவும் ஒரு சிறந்த பயிற்சியாகும். கைகளை ஸ்லிம்மாக மாற்ற கார்டியோ பயிற்சியை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கையில் உள்ள கொழுப்பை குறைப்பது எப்படி?

பிட்னஸ் பயிற்சியாளர் சரத் அவர்களின் கருத்துப்படி கைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க ஒரு சில விஷயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் பொழுது எந்தெந்த தசைகள் வேலை செய்கின்றன மற்றும் உடலின் எந்தெந்த பகுதிகளில் அதிகமாக கொழுப்பு சேர்ந்து உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த மூன்று எளிய பயிற்சிகளை வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும்.

ஹாஃப் மூன் பயிற்சி (Half Moon Exercise)

arm fat workout

  • இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் பாய் அல்லது யோகா மேட்டில் நேராக நிற்கவும்.
  • பின் உங்களுடைய ஒரு கையை மட்டும் தலைக்கு மேல் உயர்த்தி ஒரு பக்கமாக மெதுவாக உடலை சாய்க்கவும். மற்றொரு கையை தரையில் ஊன்றி நிக்கவும்.
  • இந்த பயிற்சியை செய்யும்போது இடுப்பு மற்றும் முதுகுத்தண்டு பகுதியை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும்.
  • இதே செய்முறையை பின்பற்றி மறு பக்கமும் செய்யலாம்.

எடை தூக்கும் பயிற்சி

arm fat exercise weight lift

  • உங்களிடம் டம்பெல்ஸ் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது சுமார் ஒரு கிலோ எடை உடைய கனமான ஏதேனும் பொருள் அல்லது வாட்டர் பாட்டிலையும் பயன்படுத்தலாம்.
  • இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் ஒரு கிலோ எடையுடன் நேராக நிற்கவும்.
  • கைகளை தோள்பட்டைக்கு அருகில் கொண்டு வந்து, ஸ்குவாட்ஸ்(Squats) செய்வது போல குந்துகை நிலையில் உட்கார வேண்டும்.
  • இந்த நிலையில் 5 வினாடிகள் வரை இருக்கலாம். பின் இயல்பு நிலைக்கு திரும்பவும். இந்த எடை தூக்கும் பயிற்சியை இடைவெளிகள் விட்டு 10 முறை மூன்று செட்டுகளாக பயிற்சி செய்யலாம்.

கை மற்றும் கால் லிஃப்ட் (Hands & Leg Lift Exercise)

arm fat reduction

  • இந்த பயிற்சியை செய்வதற்கு முதலில் பிளாங்க் தோரணையில் தொடங்க வேண்டும்.
  • அதற்குப் பிறகு உங்களுடைய இடது கையை முன்னோக்கி நீட்டவும். அதேசமயம் உங்களுடைய வலது காலை பின்னோக்கி நீட்ட வேண்டும்.
  • கை கால்களை முழுமையாக நீட்டி இந்த தோரணையில் சில வினாடிகள் வரை இருக்கலாம். பின்பு பொறுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.
  • இதே செயல்முறையை பின்பற்றி உங்களது வலது கை மற்றும் இடது காலை கொண்டு இந்த பயிற்சியை செய்யவும் . சிறந்த பலன்களை பெற இருபுறமும் குறைந்தது 20 முறையாவது பயிற்சி செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 விஷயங்களை செய்தால் போதும், ஒரே வாரத்தில் எடையை குறைத்திடலாம்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com