ஒரே வாரத்தில் உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமானதா? இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? இந்த கேள்விகளுக்கான விடையை யோகா பயிற்சியாளரான குமார் சவுரவ் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்ளலாம். உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இதற்கு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், நிலைத்தன்மையும் தேவைப்படும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்ட அடுத்த ஒரு வாரத்திலேயே ஸ்லிம்மாக மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள சில உணவு மற்றும் உடற்பயிற்சி குறிப்புகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உங்களுடைய உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும். ஒரே வாரத்தில் உங்கள் உடல் எடை கணிசமாக குறைவதை நீங்களே உணரலாம். இதற்கு உதவக்கூடிய சில குறிப்புகளை இப்போது தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: வாழைக்காய் சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா?
உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். தண்ணீர் குடிப்பது எடையை குறைக்க எப்படி உதவும் என்று யோசிக்கிறீர்களா? நிச்சயமாக உதவும். தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வதுடன், தேவையற்ற பசி உணர்வையும் குறைக்கிறது.
சரியான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உடற்பயிற்சியின் விளைவுகளை பயனுள்ளதாக மாற்றவும் உதவுகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள இளநீர், டீடாக்ஸ் பானம் போன்ற திரவங்களுடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
நிபுணரின் கருத்துப்படி ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் உடல் எடையை குறைக்க விரும்பினால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாரத்தில் 0.5 - 0.7 கிலோ வரை எடையை குறைக்க விரும்பினால், ஒரு நாளைக்கு 500-750 கலோரிகளுக்குள் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்த கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக புரதம் மற்றும் ஆரோக்யமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். இது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பழங்கள், உலர் பழங்கள், வேக வைத்த காய்கறிகள், சூப், சிக்கன், முட்டை, மோர் போன்ற உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம். பழங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுவதுடன் உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.
சிக்கன், பன்னீர், மற்றும் பால் சார்ந்த பொருட்களில் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான புரதம் மற்றும் கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளன. இது போன்ற உணவுகள் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். சூப், வேகவைத்த காய்கறிகள் போன்ற உணவுகளை சாப்பிடும் பொழுது முழு ஆற்றலுடன் செயல்படலாம்.
உடல் எடையை வேகமாக குறைக்க தினமும் ஓடுதல் பயிற்சியை செய்யலாம். தினமும் 30 நிமிடங்கள் ஓடுதல் பயிற்சியை செய்து வந்தால் சிறந்த விளைவுகளை விரைவில் காணலாம். ஓடுதல் பயிற்சி முழு உடலையும் ஈடுபடுத்துகிறது. ஓடுதல் பயிற்சியை 30 நிமிடங்களுக்கு செய்யும் பொழுது 500 கலோரிகள் வரை எரிக்க முடியும்.
ஓடுதல் மற்றும் பிற உடல் செயல்பாடுகளுடன் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்ய முயற்சி செய்யவும். இதற்கு தினமும் சூரிய நமஸ்காரம், தனுராசனம் போன்று சில எளிய யோகாசனங்களை பயிற்சி செய்யலாம். இந்த குறிப்புகள் யாவையும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பின்பற்றி வந்தால் ஒரு வாரத்தில் சிறந்த பலன்களை காண முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: நம்ம ஊரு மொச்சை பயறு, ஆரோக்கியமாக வாழ இது போதுமே!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com