வரட்டு இருமலை குணப்படுத்த வேண்டுமா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? அதிக சிரமம் இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா? நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்த ஒரு பொருள் உங்களுடைய அனைத்து உடல் நல பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும். ஆம், மஞ்சளில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. இதை தினமும் இரவில் பாலுடன் கலந்து குடிப்பது ஆரோக்கியத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.
புற்றுநோயின் அபாயத்தை குறைப்பது முதல் இரத்தத்தை சுத்திகரிப்பது வரை மஞ்சள் பாலை குடிப்பதன் மூலம் பல உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். மஞ்சளில் உள்ள குர்க்குமின் எனும் வேதிப்பொருளை செயல்படுத்த பாலுடன் ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடியையும் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் இரவில் மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: வாழைக்காய் சாப்பிட்டால் என்ன பலன் தெரியுமா?
மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கின்றன. இது செல்களின் சேதத்தையும் தடுக்கிறது. தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பாலை குடித்து வர மார்பகம், சருமம், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.
நம்ப முடிகிறதா? நம் வீட்டு சமையலறையில் பயன்படுத்தும் ஒரு பொருளைக் கொண்டு மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். மஞ்சள் மூட்டு வலியை போக்குவதோடு மட்டுமின்றி, மூட்டுகளின் நெகிழ்வு தன்மையையும் அதிகரிக்கிறது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு மஞ்சள் பால் அதிக நன்மைகளை கொடுக்கும்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற வேண்டியது அவசியம். மஞ்சள் இயற்கையான முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. மஞ்சள் பாலை தினமும் குடித்து வர உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கலாம்.
மஞ்சளில் கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் பாலுடன் மஞ்சள் கலந்து குடிக்கும் பொழுது எலும்பு சார்ந்த பல நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடிக்கலாம்.
மஞ்சள் பால் வலி நிவாரணையாக செயல்படுகிறது. இது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வயிற்று வலியில் இருந்து விடுபட உதவும். மாதவிடாய் நாட்களில் ஒரு கப் சூடான மஞ்சள் பாலை குடிக்கலாம். கர்ப்பிணிகளும் மருத்துவரின் ஆலோசனையுடன் மஞ்சள் பாலை தங்கள் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் தூங்க செல்வதற்கு முன் மஞ்சள் பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இது கொழுப்புகளை குறைக்கவும் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: நம்ம ஊரு மொச்சை பயறு, ஆரோக்கியமாக வாழ இது போதுமே!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com