மழைக்காலம் வந்துவிட்டால், வீட்டில் இருக்கும் பட்டுப் புடவைகளுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும். அலமாரியில் இருக்கும் உங்கள் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளில் பூஞ்சை வளர்ச்சி, நிறம் மாறுதல், பூச்சிகள் தொல்லை மற்றும் ஒருவித துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பட்டுப் புடவைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க: 2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!
சாதாரண ஈரப்பதம், மழை அல்லது அயர்ன் செய்வதனால் ஏற்படும் சிறிய ஈரப்பதம் கூட பட்டுப் புடவைகளுக்கு பிரச்சனையை அளிக்கலாம். ஈரமான இடத்தில் பட்டுப் புடவைகளை வைக்கும் போது, பூஞ்சை வளர்ச்சி வேகமாக இருக்கும். இது புடவையின் நூல் இழைகளை பலவீனப்படுத்தி சேதமடைய செய்துவிடும். எனவே, புடவைகளை எப்போதும் முற்றிலும் உலர்ந்த அலமாரியில் மட்டுமே வைக்க வேண்டும்.
அலமாரியில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு, சில இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். வேப்ப இலைகள் அல்லது உலர்ந்த லாவெண்டர் மலர்களை வைக்கலாம். இது புடவைகளை பூச்சிகளிடம் இருந்தும் பாதுகாக்கும். மேலும், கற்பூரம் அல்லது சிலிக்கா ஜெல் பைகளையும் வைக்கலாம். ஆனால், இவற்றை ஒவ்வொரு சில மாதங்களுக்கும் மாற்றிவிட வேண்டும்.
பலர் பட்டுப் புடவைகளை காற்று நுழையாத (vacuum-sealed) பிளாஸ்டிக் பைகளில் அடைத்து வைப்பார்கள். ஆனால், பிளாஸ்டிக் ஈரப்பதத்தை உள்ளே நிறுத்தி, பூஞ்சை மற்றும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கி விடும். தற்காலிகமாகக் கூட, இறுக்கமான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
இயற்கையான மற்றும் எளிமையான முறையில் ஈரப்பதத்தை உறிஞ்சும் சில பொருட்களும் உள்ளன. கரித்துண்டுகள் (activated charcoal), இந்துப்பு (rock salt) மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை ஒரு சிறிய பையில் கட்டி அலமாரியில் வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை உறிந்து கொள்ளும்.
மேலும் படிக்க: இந்தியாவில் அதிகம் அறியப்படாத 5 வகையான புடவைகள்
பட்டுப் புடவைகளை ஹேங்கர்களில் தொங்கவிட விரும்பினால், மரத்தால் ஆன அகலமான ஹேங்கர்களை பயன்படுத்துங்கள். இது புடவையில் அழுத்தம் கொடுத்து சுருக்கங்கள் விழுவதையும், அதன் வடிவத்தை இழப்பதையும் தடுக்கும். இரும்பு ஹேங்கர்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அவை துரு பிடித்து புடவையில் கறையை ஏற்படுத்தி விடும்.
சூரிய ஒளி அல்லது அதிகப்படியான வெளிச்சம் பட்டுப் புடவையின் நிறத்தை மங்கச் செய்துவிடும். எனவே, புடவைகளை இருட்டான, சுத்தமான, பூச்சிகள் இல்லாத மர அலமாரியில் அடுக்கி வைப்பது சிறந்தது.
பட்டுப் புடவைகளை ஒரே மடிப்பில் நீண்ட காலம் வைத்திருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு மாதமும் புடவைகளை எடுத்து, மெதுவாக உதறிவிட்டு, அதன் மடிப்புகளை மாற்றி அடுக்க வேண்டும். இதனால் சுருக்கங்கள் விழுவது தடுக்கப்படுவதுடன், புடவையில் உள்ள ஈரப்பதமும் வெளியேறுகிறது.
இந்தக் குறிப்புகள் அனைத்தையும் சரியான முறையில் பின்பற்றினால் இந்த மழைக்காலத்தில் உங்கள் பட்டுப் புடவைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com