2 மாத்திரைகள் மட்டும் இருந்தால் போதும்; உங்கள் வீட்டின் பழைய மெத்தையை புதியது போன்று மாற்றலாம்!

இரண்டு காலாவதியான மாத்திரைகளை பயன்படுத்தி உங்கள் வீட்டில் இருக்கும் பழைய மெத்தையை புதியது போன்று எப்படி சுத்தமாக மாற்றலாம் என்று இதில் பார்க்கலாம்.
image
image

நமது வீட்டில் இருக்கும் அனைத்து பொருட்களையும் பெரும்பாலும் சுத்தமாக வைத்திருப்போம். குறிப்பாக, டி.வி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் என அனைத்து விலை உயர்ந்த பொருட்களையும் சுத்தமாக வைத்திருப்போம். இந்த பொருட்கள் அனைத்தும் சீராக இயங்க வேண்டுமானால் அவற்றை சுத்தமாக வைத்திருப்பது அவசியம் ஆகும்.

வீட்டு உபயோக பொருட்களின் பயன்பாடு:

ஆனால், நம்முடைய வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் ஒரு பொருளை, நாம் பெரும்பாலும் சுத்தப்படுத்தி இருக்க மாட்டோம். ஆம், ஒவ்வொரு நாளும் உபயோகப்படுத்தும் மெத்தையை மட்டும் நாம் அடிக்கடி சுத்தம் செய்வது கிடையாது. நம்முடைய வீட்டில் இருப்பதிலேயே விலை உயர்ந்த பொருட்களின் பட்டியலில் நிச்சயம் மெத்தை இடம்பெறும். ஆனால், இவ்வளவு பணம் செலவு செய்து வாங்கிய மெத்தையை மட்டும் நாம் சரியாக பராமரிப்பது இல்லை.

மெத்தைக்கு மேல் விரிக்கும் போர்வை மற்றும் மெத்தை விரிப்புகளை மட்டும் அடிக்கடி துவைத்தால் போதும் என்ற ஒரு எண்ணம் பலரிடையே இருக்கிறது. ஆனால், மெத்தையும் சுத்தமாக இருப்பது அவசியம் ஆகும். ஏனெனில், அடிக்கடி இதனை பயன்படுத்துவதால் அதில் ஈரப்பதம் உருவாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது.

Mattress

மாத்திரைகள் கொண்டு மெத்தையை சுத்தம் செய்யும் முறை:

இது போன்ற கிருமிகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், மெத்தையை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், மெத்தையை வெயிலில் காயவைத்து எடுப்பது சாத்தியம் இல்லை என்று பலர் கூறுகிறார்கள். இதற்கு மாற்றாக, வீட்டில் இருக்கும் சிம்பிளான பொருட்களை கொண்டு மட்டும் மெத்தையை எப்படி ஈசியாக சுத்தம் செய்யலாம் என்று இதில் காணலாம்.

மேலும் படிக்க: துர்நாற்றம் வீசும் ஹெல்மெட்டை ( தலைக்கவசம் ) சுத்தம் செய்து நறுமணக்க உதவும் குறிப்புகள்

இதற்காக இரண்டு மாத்திரைகள் இருந்தால் கூட போதுமானதாக இருக்கும். வீட்டில் இருக்கும் காலாவதியான பழைய மாத்திரைகள் இரண்டை எடுத்து, பொடியாக இடித்துக் கொள்ள வேண்டும். இதற்கடுத்து, இந்த பொடியை இரண்டு பாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் ஒரு பாதியில் சிறிதளவு முகத்திற்கு பூசும் பௌடர், ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

Pills

வாரம் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும்:

இந்தப் பொடியை ஒரு தேநீர் வடிகட்டியை பயன்படுத்தி மெத்தையின் அனைத்து இடங்களிலும் தூவி விட வேண்டும். முக்கியமாக, மெத்தையின் அனைத்து பகுதிகளிலும் இவற்றை தூவுவது அவசியம். அப்போது தான் மெத்தையை முழுமையாக சுத்தம் செய்ய முடியும். இவ்வாறு தூவிய பின்னர், 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும்.

இனி, மீதமிருக்கும் பொடியை ஒரு கப் தண்ணீரில் கலக்க வேண்டும். இதனுடன் வாசனைக்காக சிறிதளவு துணி துவைக்க பயன்படும் லிக்யூட்டை சேர்க்கலாம். இப்போது, ஒரு சாக்ஸை எடுத்து இந்த தண்ணீரில் நன்கு நனைத்துக் கொள்ளவும். இனி, இதே சாக்ஸை கைகளில் உறை போன்று மாட்டிக் கொண்டு, மெத்தை முழுவதும் துடைத்து எடுக்க வேண்டும்.

இப்படி செய்தால் மெத்தையில் இருக்கும் கிருமிகள், அழுக்கு, துர்நாற்றம் ஆகிய அனைத்தும் நீங்கி விடும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP