இந்தியாவில் அதிகம் அறியப்படாத 5 வகையான புடவைகள்

இந்தியாவில் பெரிதும் அறியப்படாத ஐந்து வகையான புடவைகளின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை வெவ்வேறு மாநிலங்களின் சிறப்பை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
image
image

இந்தியாவில் பல விதமான பாரம்பரிய கைத்தறிகள் மற்றும் ஜவுளி வகைகள் உள்ளன. பனாரஸ், காஞ்சிபுரம், சந்தேரி போன்ற புடவைகளை பற்றி நாம் அறிந்திருந்தாலும், பலருக்கு தெரியாத இன்னும் சில அரிய வகை புடவைகள் நம் பாரம்பரியத்தில் இருக்கின்றன.

கலைநயம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த புடவைகள், நிச்சயம் பலரும் விரும்பும் வகையில் இருக்கும். அந்த வகையில், பலருக்கு தெரியாத புடவை வகைகளின் தொகுப்பை இந்தக் குறிப்பில் காணலாம்.

1. சிகோ புடவை (Sico Saree)

பட்டு மற்றும் பருத்தியின் கலவையில் உருவானது தான் சிகோ புடவை. இது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உருவானது. இந்த புடவைகள், பட்டு புடவையின் பளபளப்பையும், பருத்தி புடவையின் மென்மையையும் ஒருங்கே கொண்டவை. கோடை காலத்தில் பட்டுப்புடவையின் பாரம்பரிய தோற்றத்தையும், அதே நேரத்தில் பருத்தி புடவையின் இலகுவான உணர்வையும் விரும்புபவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.

Sico saree

2. காரட் புடவை (Garad Saree)

வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களின் கம்பீரமான கலவை தான் காரட் புடவை. இது பெரும்பாலும் மேற்கு வங்கத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் பூஜைகளின் போது அணியப்படுகிறது. தூய பட்டு நூலால் நெய்யப்படும் இந்தப் புடவையின் வெள்ளை நிறம், சாயமே இல்லாமல் இருக்கும். சிவப்பு நிற பார்டர்கள் தனியாக நெய்யப்பட்டு பின்னர் புடவையுடன் இணைக்கப்படுகின்றன. எளிமையானதாகவும், அதே நேரத்தில் வலிமையானதாகவும் இருக்கும் இந்தப் புடவை, மேற்கு வங்க பாரம்பரியத்தை விரும்பும் அனைவரையும் கவரும்.

மேலும் படிக்க: தினமும் சேலை கட்டுவீங்களா? இந்த ஃபேஷன் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க அழகா இருப்பீங்க

3. மோலகல்முரு புடவை (Molakalmuru saree)

கர்நாடகாவின் மறைக்கப்பட்ட புதையல் என்று மோலகல்முரு புடவையை கூறலாம். மயில், கோயில் கோபுரங்கள் மற்றும் பாரம்பரிய பூக்களின் தோற்றம் ஆகியவை இந்த புடவையில் நுண்ணிய ஓவியம் போல் நெய்யப்பட்டிருக்கும். இந்தப் புடவையின் கைவினைத்திறன் பார்ப்பவர்களை 'இந்தப் புடவையை எங்கே வாங்கினீர்கள்?' என்று கேட்கத் தூண்டும்.

Molakalmuru saree

4. கோட்டா டோரியா புடவை (Kota Doria Saree)

காற்றைப்போல மெல்லிய மற்றும் குளிர்ச்சியான கோட்டா டோரியா புடவைகள் ராஜஸ்தானின் கோடைக் காலத்திற்கு பிரத்யேகமானவை. எடை குறைவாக இருந்தாலும், உறுதியாக இருக்கும் இந்த புடவைகளை அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கு அணியலாம்.

5. டஸ்ஸர் கிச்சா புடவை (Tussar Ghicha Saree)

காட்டு பட்டுப்புழுக்களிலிருந்து பெறப்படும் டஸ்ஸர் பட்டு, ஒரு தனித்துவமான தங்க நிற பளபளப்பை உடையது. இது கிச்சா நூலுடன் இணைந்து நெய்யப்படும் போது, தனித்துவமான அழகியலுடன் உருவாகிறது. இந்தப் புடவைகள் இயற்கையான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது.

இது போன்ற புடவைகள் அனைத்தும் அழகியல் மட்டுமின்றி நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைப்பதால் எல்லோராலும் விரும்பப்படுகிறது.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP