
குளிர்காலத்தில் சந்தைகளில் ஆரஞ்சு நிறத்தில் பளிச்சிடும் கேரட்டுகளை நாம் அதிகம் காண முடியும். இயற்கையிலேயே ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு விளையும் காய்கறிகள், அந்தந்த பருவநிலையில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க உதவுகின்றன. அந்த வகையில், குளிர்காலத்தில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த கேரட் பெரிதும் உதவுகிறது.
குளிர்காலத்தில் நம் உடல் வெப்பநிலையை பராமரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சத்தான உணவுகள் அவசியம். கேரட்டில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை குளிரை சமாளித்து, உங்களை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இந்தக் கட்டுரையில், குளிர்காலத்தில் தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 முக்கிய நன்மைகளை காண்போம்.
குளிர்காலம் என்றால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பருவகால நோய்கள் வரிசை கட்டி நிற்கும். இதனை எதிர்த்து போராட வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் அவசியம்.
மேலும் படிக்க: Gut Friendly Foods: குளிர்காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய உணவுகள் இதோ
கேரட் சாப்பிட்டால் கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கலாம் என்று சிறுவயது முதல் நாம் கேட்டு வளர்ந்திருப்போம். குளிர்கால காற்று சில நேரங்களில் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும். இதில் இருந்து பாதுகாப்பு பெற கேரட் உதவுவதாக அறியப்படுகிறது.

குளிர்காலத்தில் பெரும்பாலனவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வறண்ட சருமம். குளிர்ந்த காற்று சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிந்து, சருமத்தை வறட்சியாக மாற்றும்.
மேலும் படிக்க: Benefits of Ragi: குளிர்காலத்தில் கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
குளிர்காலத்தில் நமது பசி எடுக்கும் திறன் மற்றும் செரிமான திறன் மாறுபடலாம். மேலும், இந்தக் காலத்தில் நாம் உண்ணும் கனமான மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

குளிர்காலத்தில் உடல் சோர்வாக காணப்படும். இதனால், உடற்பயிற்சிகளில் சில சமயம் கவனம் செலுத்துவதை தவிர்த்து விடுவது இயல்பு. மேலும், இந்த நேரத்தில் அதிகமாக சிற்றுண்டிகள் சாப்பிடுவோம். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதங்களில் கேரட் முக்கியமானது. குளிர்காலத்தில் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும், சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் கேரட் மிக அவசியம் ஆகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com