herzindagi
image

பருவநிலை மாற்றம்; அதிகரிக்கும் சளி, காய்ச்சல்; குழந்தைகளைப் பாதுகாக்க பருக வேண்டிய பானம்!

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களைப் பயன்படுத்தி மூலிகை பானத்தை தயாரிக்க முடியும்.
Editorial
Updated:- 2025-10-20, 20:13 IST

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், இருமல், சளி போன்ற வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படுகிறது. என்ன தான் இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகள் மேற்கொண்டாலும் உடனடி தீர்வு கிடைக்காது. கட்டாயம் ஒரு வார காலத்திற்காகவே குழந்தைகளைப் பாடாய்படுத்திவிடும். இந்த பாதிப்பிலிருந்து குழந்தைப் பாதுகாக்க வேண்டுமா? வீட்டிலேயே மூலிகை பானத்தை கொஞ்சம் செய்துக் கொடுக்கவும். இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மூலிகைகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. நோய்த்தொற்றிலிருந்து குழந்தைப் பாதுகாக்க பேருதவியாக உள்ளது. இதுவரை நீங்கள் இந்த மூலிகை பானத்தை வீட்டில் தயார் செய்தது இல்லையென்றால் இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே..

மேலும் படிக்க: ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஒரு வாரத்தில் உடல் எடையை குறைக்க உதவும் குறிப்புகள்

குழந்தைகளைப் பாதுகாக்கும் மூலிகை பானம்:

மூலிகை பானம் என்றவுடன் ஏதோ வனத்தில் இருந்து அல்லது நாட்டு மருந்துக்கடைகளில் இருந்து வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களைப் பயன்படுத்தி சுலபமாக தயாரிக்க முடியும். இதோ அதற்குத் தேவையான பொருட்கள் இங்கே.

  • ஏலக்காய் - 3
  • துளசி இலைகள் - ஒரு கைப்பிடி
  • புதினா இலை - சிறிதளவு
  • மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
  • இஞ்சி - சிறிய துண்டுகள்
  • கிராம்பு - 2
  • தண்ணீர் - 1 கப்
  • சர்க்கரை அல்லது தேன் - தேவைக்கு ஏற்ப

மேலும் படிக்க: மழைக்காலம் வந்தாச்சு... சருமம் பாதிப்படையாமல் இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!


செய்முறை:

  • குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சளி பிரச்சனைகளைப் போக்க தயார் செய்யப்படும் பானத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் பாதிக்குப் பாதி வற்றியவுடன் இதனுடன் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கலந்துப் பருகவும். குழந்தைகள் கசப்பை விரும்ப மாட்டார்கள் என்பதால் கொஞ்சம் கூடுதலாக சர்க்கரை கலந்துக் கொடுக்கலாம்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் அதிகரிக்கும் தொற்று நோய்கள்; உங்களை தற்காத்துக் கொள்ள சில எளிய வழிகள்


இந்த பானத்தை வாரத்திற்கு இருமுறையாவது கட்டாயம் கொடுக்க வேண்டும். கிராம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளதால் வைரல் தொற்று பாதிப்பைத் தடுக்க உதவுகிறது. இதே போன்று துளசியில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், சளி மற்றும் இருமல் தொற்று பாதிப்பை எதிர்த்துப் போராட உதவுகிறது. இலவங்கப்பட்டையில் பட்டை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிபாக்டீரியக்கள் பண்புகள் உள்ளதால் வைரஸ் தொற்றிலிருந்து எதிர்த்துப் போராட உதவுகிறது.

 

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com