
குளிர்கால ஆரம்பிச்சாச்சு. உடலைப் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எத்தனையோ பல முயற்சிகளை மேற்கொள்வோம். ஆனாலும் குளிருக்கு இதமாக சூடாக காபி அல்லது டீ அருந்துவது முதல் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் நம்மை அறியாமலே உடல் எடையையும் அதிகரிக்கும். இதை ஆரோக்கியமான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் வழக்கமான டீக்குப் பதிலாக மூலிகை பானங்களைப் பருக வேண்டும்.
மேலும் படிக்க: ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆபத்தான உணவுகள்; இவற்றை தவிர்ப்பது உடலுக்கு நல்லது
மழைக்காலம் வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைச் சந்திப்பார்கள். இவற்றை சரி செய்வதற்கும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் இஞ்சியைப் பயன்படுத்தலாம். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உடலில் உள்ள கலோரிகளைக் குறைக்கிறது.
மழைக்காலங்களில் ஏற்படும் தொண்டை கரகரப்பு, இருமல், சளி போன்ற பாதிப்புகளைச் சரி செய்ய வேண்டும் மிளகு பயன்படுத்தலாம். மேலும் இதிலி உள்ள பினாலிக் கலவைகள் மற்றும் பிளாவனாய்டுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மிளகு கொஞ்சம் காட்டமாக இருக்கும் என்பதால் தேன் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் குளிர்காலத்திலும் எவ்வித தயக்கம் இன்றி கிரின் டீயைப் பருகலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து வயிற்றுத் தொப்பையைக் குறைக்க உதவுகிறது.
மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையைப் போக்க சுக்கு மல்லி காபி அருந்தலாம். சுக்கு, மல்லி போன்றவற்றை உணவில் அதிகளவில் சேர்க்கும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: தூக்கமின்மைக்கு தீர்வு தரும் மெக்னீசியம் நிறைந்த உணவுகள்; உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்
இதுபோன்ற பானங்களைப் பருகுவதால் மழைக்காலங்களில் குளிருக்கு இதமாக இருப்பதோடு, இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலின் எடையைக் குறைக்க உதவுகிறது. அப்புறம் என்ன? குளிர்காலங்களில் எவ்வித உடல் நல பாதிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் இந்த பானங்களைத் தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் பருகலாம்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com