தனியா தூளுக்கு பதிலாக இவற்றையும் பயன்படுத்தலாம்!!!

சமைக்கும்போது தனியா பொடி தீர்ந்து விட்டால் அதற்கு பதிலாக என்னென்ன பொருட்களைப் பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

things we can use instead of coriander powder in food

தென்னிந்திய சமையலில் மசாலாப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாமும் நம் அன்றாட சமையலில் பலவிதமான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இவை உணவுக்கு சிறந்த சுவையைத் தருகின்றன. ஒரு சில மசாலாப் பொருட்கள் வீட்டில் சீக்கிரமாகத் தீர்ந்து விடும். சமையலுக்கு அவை அவசியம் என்பதால் அவசர அவசரமாகக் கடைக்குச் சென்று வாங்கி வந்து, அதை உணவில் சேர்ப்போம்.

அந்த வகையில் எல்லா உணவிலும் சேர்க்கப்படுவது கொத்தமல்லி. கொத்தமல்லியின் விதைகளை அரைத்துத் தனியா பொடியாகவும் மற்றும் அதன் இலைகளையும் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். ஒருவேளை சமைத்து கொண்டிருக்கும்போது தனியா பொடி தீர்ந்து விட்டால் இனி கவலைப்படாதீர்கள். அதற்கு பதில் என்னென்ன பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் உங்களுக்குச் சொல்கிறோம்.

சீரகம்

cumin instead of coriander powder

தனியா பொடிக்கு பதிலாக உணவில் சீரகத்தைப் பயன்படுத்தலாம். சீரகத்தை முழுசாகப் பயன்படுத்துவதற்கு பதிலாக அதை அரைத்து சீரக பொடியாக சேர்ப்பதே சிறந்தது. இதை எல்லா காய்கறிகள் சமைக்கும் போதும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த பதிவும் உதவலாம்: நிபுணர் கருத்து: இவற்றை எல்லாம் பிரஷர் குக்கரில் சமைக்க வேண்டாம்!

கறி மசாலா பொடி

curry powder instead of coriander powder

கரம் மசாலாவைப் போலவே கறி மசாலா பொடியும் தனியா, இஞ்சி, சிவப்பு மிளகாய், மஞ்சள் போன்ற பல மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. நீங்கள் கறி மசாலா பொடியைப் பயன்படுத்தினால் உணவில் மஞ்சள் பொடியை கூட சேர்க்க வேண்டாம். இந்த மசாலா பொடி உணவுக்கு நல்ல சுவையைத் தரும். தனியா பொடி இல்லையெனில் இந்த பொடியைப் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நாம் குடிக்கும் பாலில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா!!!

கரம் மசாலா பொடி

garam masala instead of coriander powder

வழக்கமாக தனியா பொடி மற்றும் கரம் மசாலா பொடி இரண்டையும் ஒன்றாகத் தான் உணவில் சேர்ப்போம். ஆனால் தனியா பொடி தீர்ந்து விட்டாலோ அல்லது கடைகளில் கிடைக்கவில்லை என்றாலோ அதற்கு பதிலாக கரம் மசாலா பொடியை மட்டும் பயன்படுத்தலாம். இதுவும் பலவகையான மசாலாப் பொருட்களைக் கொண்டு அரைக்கப்படுவதால் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.

உணவின் சுவையை அதிகரிக்க நீங்கள் எந்த மசாலாப் பொடியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP