சாதத்துடன் தயிர், உப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த சிவப்பு மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு கலந்து ஆரோக்கியமான முறையில் தயிர் சாதம் செய்து சாப்பிடலாம்.
இதில் பஜ்ஜி, பக்கோடா போன்ற எந்த எண்ணெய் பொருளும் சேர்க்கப்படுவதில்லை. குஜராத்தில் மிகவும் பிரபலமான இந்த உணவு தயிரை வைத்து தயரிக்கப்படுகிறது. இதில் சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால் லேசான இனிப்பு சுவையும் கிடைக்கும்
கெட்டியான தயிரில் பொரித்த உளுந்து வடைகளை சேர்த்து நன்கு ஊற வைத்து தயிர் வடையாக சாப்பிடலாம். இது உண்பதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
தயிருடன் நறுக்கிய காய்கறிகள் மற்றும் ஹெர்ப்ஸ் சேர்த்து நன்கு கலந்து, அதை பிரட் துண்டுகளுக்கு நடுவில் வைத்து சாண்ட்விச் போல் ரோஸ்ட் செய்து சாப்பிடலாம்.
பனீர், வெங்காயம், கொத்தமல்லி, உலர் பழங்கள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மசாலாவை தயார் செய்யவும். பின்பு கெட்டியான தயிருக்கு நடுவில் மசாலாவை வைத்து வடை போல் தட்டி தவாவில் போட்டு பொரித்து எடுக்கவும். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.
தயிரில் உப்பு, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காயம் சேர்க்கவும். பின்பு அதை பிரட் துண்டுகளுக்கு நடுவில் வைத்து ரோல் போல் மடித்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும். மாலை நேர ஸ்நாக்ஸாக தயிர் பிரட் ரோல்ஸை உண்டு மகிழலாம்.
காஷ்மீரி தம் ஆலு ரெசிபியில் வெங்காயம், பூண்டு அல்லது தக்காளி ஆகியவற்றை பயன்படுத்துவதில்லை. இந்த உணவுக்கு ருசியை தந்து காரத்தை சமன் செய்ய தயிர் பயன்படுத்தப்படுகிறது.
உங்கள் வீட்டிலும் தயிர் அதிகம் மீந்து விட்டால் அதில் இந்த ரெசிபிக்களை முயற்சி செய்து பாருங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com