herzindagi
image

இந்த ஜூஸ்கள் குடித்துப்பாருங்கள்; குளிர்காலத்தில் சருமம் பளிச்சின்னு நிலவு போல ஜொலிக்கும்!

குளிர்ந்த காற்று குளிப்பதற்குக்கூட சோம்பேறியான மனநிலையைக் கொடுக்கும். அதே சமயம் முகத்தை நிலவு போன்று ஜொலிக்க செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் சில ஜுஸ்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-28, 00:00 IST


நிலவு போன்று முகத்தைப் பெறுவதற்கு என்ன தான் வெளிப்புறமாக பெண்கள் தங்களை அழகாக்கிக் கொள்ள முயற்சி செய்தாலும், உள்ளார்ந்த சில விஷயங்களைச் செய்தால் மட்டுமே பொலிவாக வைத்திருக்க முடியும். ஆம் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்டகள் நிறைந்த உணவுகள் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆற்றலை அளிக்கும். இந்த வரிசையில் இன்றைக்கு குளிர்காலத்திலும் சரும பொலிவு பெற உதவும் ஜுஸ்கள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.

சருமத்தைப் பொலிவாக்கும் ஜுஸ்கள்:


வெள்ளரி ஜூஸ்:


சருமம் நீரேற்றத்துடன் இருந்தால் மட்டுமே முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்பதால் அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த வெள்ளரியை உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் அல்லது வாரத்திற்கு 2 முறையாவது வெள்ளரியைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படும் ஜூஸை நீங்கள் பருகலாம். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுகக்கள் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது. மேலும் சருமம் வறண்டு விடுவதைத் தடுப்பதோடு கருவளையம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மேலும் படிக்க: Winter Skin Care: குங்குமாதி தைலம் போதும்; குளிர்காலத்திலும் சருமத்தைப் பளபளப்பாக முடியும்!


தக்காளி ஜூஸ்:

முகத்தைப் பளபளப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக தக்காளி ஜூஸ் பருகலாம். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் தோல் எரிச்சலைக் குணப்படுத்துவதோடு சருமத்தில் பருக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

மேலும் படிக்க: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ


கேரட் ஜூஸ்:


பெண்களின் சருமம் பளபளப்புடனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், கேரட் ஜூஸ் உங்களுக்கு நல்ல தேர்வாக அமையும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக உள்ளதால் உள்ளார்ந்து சருமத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்றி எப்போதும் பொலிவுடன் இருக்க உதவியாக இருக்கும்.

 

கீரை சாறு:

குளிர்காலத்தில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும். உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதோடு சருமத்திலும் பருக்கள் அதிகமாகுதல், முகத்தில் வெண்திட்டுகள் ஏற்படுவது போன்ற பாதிப்புகளெல்லாம் ஏற்படும். இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் அரைக்கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி போன்ற கீரை வகைகளில் ஏதாவது ஒன்றை ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

 மேலும் படிக்க: குளிர்காலத்தில் சருமம் எண்ணெய் பசையாக மாறும் தருனத்தில் இந்த 2 DIY ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்

இதோடு மட்டுமின்றி முகத்தில் அதிகம் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பை நீக்க செலரி சாறு, முகத்தில் படிந்திருக்கும் கறைகள் மற்றும் நச்சுக்களை நீக்க உதவும் வகையில் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். பொதுவாக பீட்ரூட் ஜூஸ் சரும பிரச்சனைக்களுக்கு மட்டுமல்ல வெண்மையான முகத்தைப் பெறுவதற்கும் உதவியாக உள்ளது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com