வெயில் காலம் வந்தாலே உடல் சூட்டைக் குறைக்கவும், உடலை சோர்வடையாமல் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இளநீர், மோர், பதநீர், நீர் ஆகாரம் போன்றவற்றைத் தான் அதிகளவில் சாப்பிட வேண்டும் என்று நினைப்போம். இத்தகைய உணவுகள் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிப்பதோடு தற்போது சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.
ஆனால் நம்முடைய குழந்தைகள் அனைவரும் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்களா? என்றால் நிச்சயம் இல்லை. இந்த சூழலில் தான் கோடைக்காலம் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய மாம்பழங்களைக் கொண்டு சுவையான மாம்பழ லெஸ்ஸியைக் கொஞ்சம் ட்ரை பண்ணிப்பாருங்க. நிச்சயம் சுவையோடு கோடை வெயிலுக்கு இதமாகவே அமையும். இதோ சிம்பிளாக எப்படி லெஸ்ஸி செய்து சாப்பிடலாம் என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க:சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?
ஆரோக்கியமான மாம்பழ லெஸ்ஸி:
தேவையான பொருட்கள்:
- தயிர் - 150 மில்லி கிராம்
- குளிர்ந்த நீர் - 250 மில்லி
- மாம்பழம் - 1
- சர்க்கரை - உங்களின் சுவைக்கு ஏற்ப
- புதினா - சிறிதளவு
செய்முறை:
- குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய மாம்பழ லெஸ்ஸி செய்வதற்கு முதலில், மாம்பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- இதையடுத்து தயிர், சர்க்கரை, புதினா, சிட்டிகை உப்பு, குளிர்ந்த நீர் மற்றும் சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அரைத்து வைத்துள்ள மாம்பழ கலவையை ஒரு டம்ளரில் ஊற்றி சிறிதளவு ஐஸ் கட்டிகளை உடன் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் சுவையை அதிகரிக்க சிறிதளவு புதினா மற்றும் பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை உடன் சேர்த்தால் போதும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாம்பழத்தைக் கொண்டு செய்யப்படும் மாம்பழ லெஸ்ஸி ரெடி.
மாம்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
கோடைக்காலம் வந்தாலே மாம்பழங்களைக் கொஞ்சம் கூட பஞ்சம் இருக்காது. மல்கோவா, கிளி மூக்கு, அல்போன்சா போன்ற பல வகையான மாம்பழங்கள் சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. பொதுவாக சீசன்களில் கிடைக்கக்கூடிய பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்பதால் நிச்சயம் நீங்கள் சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க:உடல் எடையை சட்டுனு குறைக்க சாக்லேட் காபி சியா புட்டிங் ட்ரை பண்ணுங்க!
குறிப்பாக மாம்பழங்களில் பாஸ்பரஸ், பாந்தோத்தேனிக் அமிலம், கால்சியம், செலினியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், சிங்க் போன்ற பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இது போன்ற ஊட்டச்சத்துக்கள் கோடைக்காலத்தில் ஏற்படக்கூடிய உடல் சோர்வைக் குறைக்கும். இதோடு வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகளால் ஏற்படக்கூடிய பாதிப்பைத் தவிர்ப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே சுட்டெரிக்கும் இந்த வெயிலின் தாக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்க மாம்பழங்களைக் கட்டாயம் உணவு முறையில் சேர்த்துக் கோங்க.
Image source - google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation