இன்றைய தலைமுறையினர் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக நம்முடைய முன்னோர்கள் சருமத்தைப் பொலிவாக்க பயன்படுத்தியது மஞ்சள். குழந்தைப் பிறந்தது முதல் வயதாகும் வரை மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களது சருமம் முகச்சுருக்கங்கள் இன்றி எப்போதும் பொலிவுடன் இருக்கும். நீங்களும் எப்போதும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், மஞ்சளை இந்த வழிமுறைகளில் பின்பற்றத் தொடங்குங்கள்.
இன்றைக்கு அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவற்றால் சருமம் எப்போது வறண்டு விடுவதோடு அதன் பொலிவுத் தன்மையை இழக்க நேரிடுகிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வீட்டில் எளிமையான முறையில் தயாரிக்கப்படும் மஞ்சள் முக ஸ்க்ரப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்திற்கு மூன்று முறையாவது மஞ்சள் ஸ்க்ரப்பைப் பயன்படுத்தும் போது, இதில் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
மேலும் படிக்க: வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!
மேலும் படிக்க: தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை எண்ணெய் காய்ச்சும் முறை இது தான்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com