Chocolate Coffee Chia Pudding: உடல் எடையை சட்டுனு குறைக்க சாக்லேட் காபி சியா புட்டிங் ட்ரை பண்ணுங்க!

உடல் எடையை சட்டுனு குறைக்க சாக்லேட் காபி சியா புட்டிங் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

 CAH CoffeeChiaPudding Hdr  ()

காபி பிடிக்காதவர்கள் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பாக பில்டர் காபி என்பது தென் இந்தியாவின் ஒரு கிளாசிக் பானமாகும். பிரபல நடிகை சமந்தாவின் மிகவும் பிடித்த ஒரு உணவு வகை இந்த காபி சியா புட்டிங். உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு இந்த காபி சியா புட்டிங் ஒரு சிறந்த உணவு. இந்த வரிசையில் வீட்டில் இருந்தபடி சுவையான சாக்லேட் காபி சியா புட்டிங் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சாக்லேட் காபி சியா புட்டிங் செய்ய தேவையான பொருட்கள்:

  • ரெண்டு டேபிள் ஸ்பூன் சாக்லேட் பவுடர்
  • அரை வாழைப்பழம்
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் தேன்
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் சியா விதை
  • 180 மில்லி கிராம் பால்
  • ரெண்டு டேபிள் ஸ்பூன் காபி பவுடர்

சுவையான சாக்லேட் காபி சியா புட்டிங் செய்வது எப்படி?

oats and coffee ()

முதலில் நாம் எடுத்து வைத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ள வேண்டும். இதற்கு பிறகு சாக்லேட் பவுடர் காபி பவுடர் சியா விதைகளை சேர்த்து கிளறுங்கள். இப்போது இதை நன்கு கலந்த பிறகு தேவையான அளவு பால் சேர்த்து கிளற வேண்டும். ஒரு சிலருக்கு பால் பொருட்கள் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் ஓட்ஸ் பால் அல்லது பாதாம் பால் சேர்த்து கொள்ளலாம். பின்னர் சிறிதளவு தேன் சேர்த்து கிளற வேண்டும். இப்போது இதை ஒரு கப்பில் ஊற்றி குறைந்தது 2 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் எட்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். இந்த சாக்லேட் காபி சியா புட்டிங் சாப்பிடவும் சுவையாக இருக்கும் மற்றும் இது நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. தினசரி காலையில் இதை உணவாக சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய உதவுகிறது.

உடல் எடை குறைக்க உதவும் சியா விதைகள்:

இந்த சியா விதைகளில் ஆக்சிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வலுவான எலும்புகளை ஆதரிக்கவும் இந்த சியா விதைகளை சாப்பிட்டு வரலாம். சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு நன்மை அளிக்கிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP