herzindagi
Frozen cake

Special Cakes : கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதவிதமான கேக்

நீங்கள் இனிப்பு பிரியர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் சுவை மொட்டுக்களை குஷிப்படுத்தும் கேக் சுவைகள் இங்கே உள்ளன.
Editorial
Updated:- 2023-12-20, 10:52 IST

நாம் 2023ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். அதாவது புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன என புரிந்து கொள்ளலாம். மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து கொண்டாட்ட தினங்கள் வருகின்றன. இந்த சிறப்பான நாள்களில் உணவு வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பதில் கேக் வகைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேக் இன்றி ஒதுபோதும் முழுமையடையாது. எனவே இந்த புத்தாண்டிற்கு நீங்கள் ருசிக்க வேண்டிய சில கேக் வகைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

பூசணி கேக் 

Pumkin Cake

பம்கின் கேக் எனும் பூசணி கேக்-ஐ இலையுதிர் கால இனிப்பு என அழைக்கலாம். இது மசாலா மற்றும் கிரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங் மூலம் செறிவூட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இந்த கேக்கை நீங்கள் கட்டாயம் ருசிக்க வேண்டும். மேப்பிள் கிரீம் சீஸ் நிரப்பப்பட்ட இரட்டை அடுக்கு பூசணி கேக் உங்களுக்கு சரியான தீனியாக அமையும்.

குருதிநெல்லி ஆரஞ்சு கேக்

குருதிநெல்லி ஆரஞ்சு கேக் என்பது பெயருக்கு ஏற்றது போலவே குருதிநெல்லிகள் ஏற்றப்பட்டு ஆரஞ்சு சுவையுடன் நிரம்பியுள்ளது. இந்த கேக் க்ரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங்கைப் கொண்டது. இது புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு மட்டுமின்றி குளிர்காலப் பிறந்தநாளுக்கும் வாங்கி சுவைக்கலாம்.

Cake with fruits

கேரமல் ஆப்பிள் கேக்

கேரமல் ஆப்பிள் கேக் என்பது ஆப்பிள் மற்றும் கேரமல் பட்டர்கிரீம் ஆகியவற்றின் சரியான கலவையாகும். இந்த கேக்கின் சுவையை அதிகரித்திட அதன் மேல் கேரமல் தூவப்படுகிறது. கேக் பேக்கிங் செய்யப்படும் போது ஆப்பிள்களை சிறிய துண்டுகளாக நறுக்கி அப்படியே வைக்கலாம். ஆப்பிளை எந்த ஸ்டைலில் பயன்படுத்தினாலும் கேக்கின் சுவை அப்படியே இருக்கும்.

Apple Cake

மேலும் படிங்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சாக்லேட் கேக் !

மோச்சா கேக் 

இது சாக்லேட், மிளகுக்கீரை மற்றும் எஸ்பிரெசோ ஆகியவற்றின் கலவையாகும். இந்த கேக் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். காபி உட்செலுத்தப்பட்ட கேக்கில் மிளகுக்கீரை இருக்கிறது. இதனால் கேக்கின் சுவையை அதிகரிக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு இது சரியான கேக் ஆகும்.

ஜிஞ்சர்பிரெட் கேக்

இது இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு கொண்ட ஒரு உன்னதமான விடுமுறை விருந்தாகும். சாதாரண கேக்குடன் மேற்கண்ட அனைத்து பொருட்களையும் கலந்து பேக்கிங் செய்ய வேண்டும். உறையாத நிலையிலும் இந்த கேக் மிகச் சுவையாக இருக்கும்.

மேலும் படிங்க Kulfi Ice Cream : உள்ளங்களை கொள்ளையடிக்கும் குல்ஃபி!

வெண்ணிலா கேக் 

மிகவும் பாரம்பரியமான வெண்ணிலா கேக் எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் கொண்டாட ஏற்றது. கேக் ஈரப்பதமாகவும் பஞ்சுபோன்றதாகவும், போதுமான இனிப்புடன் இருக்கும். 

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com