திருப்பதி லட்டு வரலாறு : ரூ.500 கோடி வருவாய் ஈட்டும் பிரசாதத்தின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா ?

மாட்டு கொழுப்பை சேர்த்து திருப்பதி லட்டு-ன் புனிதத்தை கெடுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 500 கோடி வருவாயை அளிக்கும் திருப்பதி லட்டுவின் வரலாறு, தயாரிப்பு, செலவு பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்...
image

மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கொண்ட நெய் பயன்பத்தி திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான தரிசித்த லட்டு வாங்கிய பிறகே வீடு திரும்புவோம். திருப்பதி லட்டு சுமார் 300 வருட பாரம்பரியம் கொண்டது. ஏழுமலையானுக்கு லட்டு நெய் வேத்தியம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு தயாரிக்க எவ்வளவு செலவு செய்யப்படுகிறது, விலை, ஏன் புனித பிரசாதம் என்றழைக்கப்படுகிறது போன்ற விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

laddu beef fat

திருப்பதி லட்டு வரலாறு

விஷ்ணு அவதாரமான வெங்கடேஷ்வரா, பாலாஜி, ஏழுமலையான், கோவிந்தா என பல பெயர்களில் அழைக்கப்படும் பெருமாளுக்கு அளிக்கப்படும் முக்கியமான நெய் வேத்தியமாக லட்டு விளங்குகிறது. சுமார் 300 ஆண்டுகளாக 1715ல் இருந்து திருப்பதியில் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு என்ற பெயர்களில் திருப்பதி கோவிலின் அதிகாரப்பூர்வ விற்பனை கூடங்களிலும் பிற மாநிலங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடங்களிலும், ஆன்லைனிலும் திருப்பதி லட்டு கிடைக்கும். 1920ல் இருந்து லட்டு விற்கும் திருப்பதி தேவஸ்தானம் அதற்கு காப்புரிமையும் பெற்றுள்ளது. மேலும் 2014ல் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டது.

திருப்பதி லட்டு தரம் & விலை

திருப்பதியில் நமக்கு மூன்று விதமான லட்டு கிடைக்கும். கோவிலுக்குள் 40 கிராம் அளவில் பிரசாதமாகவும், விற்பனை கூடங்களில் 175 கிராம் அளவில் பக்தர்களுக்காகவும், சில சமயங்களில் 750 கிராம் அளவிலும் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் நாம் சாப்பிடும் லட்டுவின் எடை 175 கிராம் ஆகும். இதன் விலை 50 ரூபாய், 750 கிராம் லட்டுவின் விலை 200 ரூபாய் ஆகும். கோவிலின் அருகே உள்ள Potu என்ற இடத்தில் ஆயிரக்கணக்கில் லட்டு தயாரிக்கப்படும். தயாரிப்பு முறையில் போதியளவு முந்திரி, சர்க்கரை, ஏலக்காய் பயன்படுத்தபட்டு ஒவ்வொரு லட்டு-ம் 175 கிராம் எடை உள்ளதா என சோதிக்கப்படும். தயாரித்த நாளில் இருந்து 15 நாள் மட்டுமே லட்டு சுவை குறையாது.

தினமும் 3 லட்சம் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு மகா பிராசதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்திற்கு 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தருகிறது. இதற்கு முன் திருப்பதி திருமலை தேவஸ்தானம் ஒரு கிலோ நெய் 320 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது. இந்த ஒப்பந்ததாரர் தற்போது பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது கர்நாடகாவை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் ஒரு கிலோ நெய் 475 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏழுமலையானுக்கு நெய் வேத்தியம் செய்யும் பிரசாதமான லட்டுவின் புனிதத்தை கெடுத்த நபர்களை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP