herzindagi
tips to idli making

கேரள ஸ்பெஷல் மரவள்ளி கிழங்கு இட்லி!

<span style="text-align: justify;">கேரள மக்களின் உணவுமுறைகளில் முக்கியமானது மரவள்ளி கிழங்கைப் பயன்படுத்தி செய்யப்படும் ரெசிபிகள்</span>
Editorial
Updated:- 2024-05-31, 16:51 IST

தென்னிந்திய உணவுகளில் தனக்கென ஓர் தனி இடம் வகித்துள்ள ரெசிபிகளில் ஒன்றாக உள்ளது இட்லி. என்ன தான் விதமான ரெசிபிகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு இட்லி மீதான காதல் அலாதி தான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், ஹோட்டல்களுக்குச் சென்று என்னென்ன ரெசிபிகள் உள்ளது? என பட்டியலிட சொல்லிக் கேட்ட பின்னதாக இறுதியில் இட்லி இருக்கா? என்ற கேள்விகளை நம்மில் பலர் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். 

ஆம் அந்த அளவிற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் இட்லி மிகவும் பிரசிதிப்பெற்றது என்று தான் கூற வேண்டும். இதில் கொஞ்சம் மாற்றத்தோடு வித்தியாசமான முறையில் இட்லி செய்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு உள்ளதா? அப்படின்னா ஊட்டச்சத்துகள் நிறைந்த மரவள்ளி கிழங்கு கொண்டு செய்யப்படும் இட்லியைக் கொஞ்சம் ட்ரை பண்ணிப்பாருங்கள்.

maravalli kilangu

மரவள்ளி கிழங்கு இட்லி:

கேரள மக்களின் உணவுமுறைகளில் முக்கியமானது மரவள்ளி கிழங்கு. அங்கு சென்றாலும் நிச்சயம் மீன் குழம்பு, கிழங்கை ஒருமுறையாவது ருசித்து சாப்பிட்டிருப்போம். இந்த வரிசையில் மரவள்ளி கிழங்கை வைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கப்ப இட்லி எனப்படும் மரவள்ளி கிழங்கு இட்லி எப்படி செய்வது? அதற்குத் தேவையான பொருட்கள் என்ன? என்பது குறித்த விபரம் இங்கே.

தேவையான பொருட்கள்:

  • இட்லி அரிசி - 2 கப்
  • பச்சரிசி - 1 கப்
  • மரவள்ளி கிழங்கு - 3
  • உளுந்தம்பருப்பு - கால் கப்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப

செய்முறை:

  • மரவள்ளி கிழங்கு இட்லி தயார் செய்வதற்கு முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசியை சுமார் நான்கு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
  • பின்னர் மரவள்ளி கிழங்கை தோல் சீவி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
  • நான்கு மணி நேரத்திற்குப் பிறகு ஊற வைத்த அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை கிரைண்டர் அல்லது அரிசியின் அளவு கொஞ்சமாக இருந்தால் மிக்ஸியில் போட்டுஅ அரைத்துக் கொள்ளவும். 
  • இதையடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள மரவள்ளி கிழங்குகளையும் தண்ணீர் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த மாவுடன் உப்பு மற்றும் மரவள்ளி கிழங்கு அரைத்த கலவையை சேர்த்து நன்கு கலந்து 6 மணி நேரத்திற்கு புளிக்க வைத்தால் போதும் ஆரோக்கியம் நிறைந்த கப்ப இட்லிக்கான மாவு ரெடி.

 

  • பின்னர் வழக்கமாக இட்லி சுடுவது போன்று 10 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் போதும் சுவையான மரவள்ளி கிழங்கு இட்லி ரெடி.  இதற்கு சாம்பார், தக்காளி, தேங்காய், புதினா,கொத்தமல்லி, இட்லி பொடி உன  உங்களுக்குப் பிடித்த சட்னியை வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயம் இதன் சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது.

Image source - Google 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com