-1763314520019.webp)
பொதுவாக நம்முடைய சருமத்துக்கு அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான சீபம் என்ற திரவத்தைச் சுரக்கும். உடல் முழுதும் இந்தச் சுரப்பி இருந்தாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகச் சுரக்கும் பருவ வயதில் ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன.
வெயில்காலங்களை விட குளிர்காலத்தில் முகத்தில் பருக்கள் அதிகமாக வரக்கூடும். இதற்கான காரணம் என்ன? இவற்றைத் தவிர்க்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
குளிர்காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் போன்ற பல்வேறு காரணங்களால் முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கிறது.இதைத் தவிர்ப்பதற்கு சருமத்தைப் பராமரிப்பதில் அதீத அக்கறைக் காட்ட வேண்டும். குளிர்காலத்தில் முகத்தை எப்போதும் கழுவினாலும் அதன் பின்னதாக கிரீம்கள் மற்றும் மாய்ஸ்சரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை சருமத்தை அதிகமாக வறண்டு விட செய்யும். எனவே ரோஸ் வாட்டருடன் சிறிதளவு கிளிசரின் கலந்து லோஷன் போன்று முகத்தில் அப்ளை செய்யவும். முகத்திற்குத் தேவையான ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது.
மேலும் படிக்க: சருமத்தில் உள்ள கருமையை போக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்குகள்
மேலும் படிக்க: 50 வயதிலும் உங்கள் தலைமுடியை 20 வயதில் இருப்பது போல் பராமரிக்க உதவும் குறிப்புகள்
இதே போன்று வேப்பிலையை அரைத்து பேஸ்ட் போன்று தயார் செய்து முகத்தில் தடவவும். இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கவும், முகப்பருக்களை அகற்றவும் உதவியாக உள்ளது. கற்றாழை ஜெல்லை முகத்தில் அப்ளை செய்யும் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும். இதோடு மட்டுமின்றி ஊட்டச்சத்துக்கள் காய்கறிகள், பழங்கள், தயிர் போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சருமத்தை நீரேற்றதுடன் வைத்திருக்க தினமும் 2 லிட்டர் வரையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com