herzindagi
image

Winter Skin Care: வெந்தயம் போதும். குளிர்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனையைத் தவிர்க்கலாம்! எப்படி தெரியுமா?

குளிர்ந்த காற்று, லேசான சாரல் மழை போன்றவைக் முகத்தைத் தழுவிச் செல்லும் போது சருமம் வறண்டு விடுதல், முகத்தில் வெண்திட்டுகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இவற்றை சரி செய்ய விலையுயர்ந்த பொருட்கள் வேண்டாம். வீட்டு சமையல் அறையில் இருக்கும் வெந்தயம் போதும். இதைப் பயன்படுத்தி செய்யப்படும் பேஸ் பேக் அனைத்து சருமத்தினக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கிறது.
Editorial
Updated:- 2025-11-26, 21:59 IST

கார்த்திகை மாதம் தொடங்கி மாசி வரை குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மழை பொழிவும் அதிகமாக இருப்பதால் குளிரின் தாக்கமும் சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்ல சருமத்திற்கும் பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிட்டு சென்று விடுகிறது. அவை என்னென்ன? இவற்றை சரி செய்ய வெந்தய பேஸ் பேக் எப்படி உதவியாக இருக்கும்? என்பது குறித்து இந்த கட்டுரையின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

குளிர்ந்த காற்றால் ஏற்படும் சரும பிரச்சனை:

  • குளிர்காலத்தில் நிலவக்கூடிய அதிகப்படியான குளிர்ந்த காற்றினால், சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சரும இறுக்கம், தோல் உரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
  • குளிர்காலத்தில் சருமம் அடிக்கடி வறண்டு விடக்கூடும். இதனால் உடலில் நீர்ச்சத்துக்கள் குறையக்கூடும். இதனால் உதடு வெடிப்பு, உதடுகளின் ஓரத்தில் புண் போன்றவற்றை ஏற்படுத்தும். இதோடு கரும்புள்ளிகள், முகப்பருக்கள், முகத்தில் வெண்திட்டுகள் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும்.

மேலும் படிக்க: Fenugreek Face Pack : சருமம் மிளிர வெந்தயம் பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!

குளிர்கால சரும பிரச்சனைக்கு வெந்தய பேஸ் பேக்:

  • வெந்தய பொடி ஒரு கப், கற்றாழை ஜெல் ஒரு கப், பாதாம் எண்ணெய் ஒரு கப் போன்றவற்றை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுலில் பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்து அரைத்து வைத்துள்ள வெந்தய பொடியையும் சேர்க்கவும். தற்போது வெந்தய பேஸ் பேக் ரெடி.
  • இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின்னதாக, காட்டன் துணியைக் கொண்டு துடைத்தெடுத்தால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக உள்ளது.

வெந்தய பேஸ் பேக் மற்றும் சரும பராமரிப்பு:

  • வெந்தயத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைக் குறைக்க உதவுகிறது.
  • வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளதால், சருமத்தை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. குளிர்ந்த காற்றால் ஏற்படக்கூடிய சரும வறட்சியைத் தவிர்ப்பதோடு வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயிலில் முகம் கருப்படிக்காமல் இருக்க வெந்தய ஃபேஸ் பேக் முகத்தில் இபப்டி போடுங்க - சூப்பர் ரிசல்ட் தரும்

  • கவனிக்க வேண்டியவை:

இதுபோன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களை வெந்தயம் கொண்டிருந்தாலும், சருமத்தில் அப்ளை செய்யும் போது லேசாக ஒரு இடத்தில் தடவி சோதித்துப் பார்க்கவும். அழற்சி எதுவும் இல்லையென்றால் உடனடியாக அப்ளை செய்யவும். வெந்தயத்திற்கு குளிர்ச்சியான தன்மை இருப்பதால் குளிர்காலங்களில் அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது. ஐந்து நிமிடங்களில் முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. லேசான முகப்பருக்களுக்குத் தீர்வு காண உதவியாக இருக்கும். அதிகமான முகப்பருக்கள் போன்ற பல அதிகமாக சரும பிரச்சனைகள் இருந்தால் இதைப் பயன்படுத்தினாலும் தோல் மருத்துவரின் ஆலோசனைக் கேட்பது நல்லது.

Image source - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com