
சாக்லேட் என்று கூறினால் யாருக்கு தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருள் இந்த சாக்லேட். இந்த சாக்லேட்டை கொண்டு பல விதமான ஸ்வீட் வகைகளும் ஐஸ்கிரீம் வகைகளையும் கேக் வகைகளையும் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். சாக்லேட் சாப்பிடுவது ஆரோக்கியம் இல்லை என்று பலரும் கருதுகின்றனர். அப்படியானால் இந்த ஆரோக்கியமான சிறுதானிய சாக்லேட் கேக்கை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

முதலில் ஒரு குக்கர் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குக்கரில் ஒரு அலுமினிய பாத்திரம் வைத்து அதில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பின்னர் கோதுமை மாவு, கம்பு மாவு, ராகி மாவு என்று அனைத்து மாவு வகைகளையும் சேர்த்து, தேவையான அளவு சாக்லேட் பவுடர் உப்பு கலந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த மாவு கலவையை சேர்த்து அதில் சிறிய குழி போல செய்து அதனுள் எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். பிறகு இதில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை நன்றாக கலக்க வேண்டும். இப்போது இந்த மாவு கெட்டி பதத்தில் கலவையாக வந்த பிறகு வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி குக்கரில் வைத்துள்ள பாத்திரத்தில் வைத்து மூடி விட வேண்டும். சுமார் அரை மணி நேரம் கழித்து திறந்து எடுத்து பார்த்தால் சுவையான சாக்லேட் கேக் ரெடி. இப்போது இதனை சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.
மேலும் படிக்க: சுவையான தேங்காய் பால் அல்வா செய்வது எப்படி?
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறையாவது டார்க் சாக்லேட்டை சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் இது ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. டார்க் சாக்லேட் சாப்பிடும் நபர்களுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். அதேபோல டார்க் சாக்லேட்டை சாப்பிட்டு வருவதால் நம் மூளைக்கு நன்கு சிந்திக்கும் திறன் கிடைக்கிறது. இந்த டார்க் சாக்லேட்டில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் செல்களுக்கு பாதிப்பு அளிக்கும் ரேடிக்கல்களை போக்கி புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இந்த டார்க் சாக்லேட்டில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் கனிமச் சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே குழந்தைகள் கூட இந்த டார்க் சாக்லேட்டை அளவாக சாப்பிட்டு வரலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com