
தேங்காய் அல்லது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகள் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு காரணம் தேங்காய் பால் அல்லது தேங்காய் எவ்வளவு சாப்பிட்டாலும் சீக்கிரம் திகட்டாமல் இருக்கும். மேலும் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிக்கடி சளி இருமல் ஏற்படாமல் இருக்க தேங்காய்ப்பால் உதவுகிறது. அந்த வகையில் ஆரோக்கியமான சுவையான தேங்காய் பால் அல்வா எளிய முறையில் வீட்டில் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முதலில் ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி சூடாக்கி அதில் ஒரு கப் தேங்காய் துருவல் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும். இதன் பிறகு அதே கடாயில் நெய்யில் நாம் எடுத்து வைத்த அரை கப் தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதனை தொடர்ந்து நன்கு கிளறிக் கொண்டே இருந்தால் தேங்காய்ப்பால் கெட்டி பதத்திற்கு வரும். இந்த தருணத்தில் இதனோடு வெல்லம் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த தேங்காய் பாலில் வெல்லம் சேர்க்கும் பொழுது சற்று இளகிய பதத்தில் மாறி வரும் என்பதால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீரில் சேர்த்து நன்கு கரைத்து இதில் சேர்க்க வேண்டும். இப்போது இதனை தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா பதம் கிடைத்துவிடும். இதில் வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை என எது வேண்டுமோ உங்கள் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அல்வா பதத்திற்கு திரண்டு வரும்போது சிறிது ஏலக்காய் பொடி மற்றும் நெய்யில் வறுத்து எடுத்து வைத்த முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து கிளறி விடுங்கள். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் அல்வா ரெடி.
மேலும் படிக்க: கோடையில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க தர்பூசணி காக்டெய்ல் ரெசிபிகள்!
வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி1, வைட்டமின் பி3, பி5 மற்றும் பி6, இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் தேங்காய் பாலில் நிறைந்துள்ளது. தேங்காய் பாலில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் தாதுக்கள் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். தேங்காய் பாலில் அதிக அளவு ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியம் மேம்படுத்த உதவுகிறது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com