Milk Halwa Recipe: ஆரோக்கியமான சுவையான பால் அல்வா செய்வது எப்படி?

பால் வாசனை பிடிக்காதவர்களுக்கு இந்த சுவையான பால் அல்வா செய்து கொடுக்கலாம்.

milk halwa recipe in tamil

ஸ்வீட் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? என்னதான் வெளியில் ஸ்வீட் வாங்கி சாப்பிட்டாலும் நம் கைப்பட வீட்டில் செய்து சாப்பிடுவதுபோல் சுவை வராது. சுவை மட்டும் இல்லாமல் நாம் வீட்டில் செய்யும் ஸ்வீட் வகைகளில் ஆரோக்கியமும் கிடைக்கும். பால் குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இந்த சுவையான ஆரோக்கியமான பால் அல்வாவை விரும்பி சாப்பிடுவார்கள். வெறும் பத்து நிமிடம் இருந்தால் போதும் இந்த அல்வாவை வீட்டிலேயே எளிதாக சமைக்கலாம். ஆரோக்கியமான பால் அல்வா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சுவையான பால் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  • 500 மில்லி மாட்டுப்பால்
  • 300 கிராம் நெய்
  • 500 கிராம் சீனா கற்கண்டு
  • ஒரு டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ
  • பாதாம், பிஸ்தா, முந்திரி தேவையான அளவு

மேலும் படிக்க: சுவையான கோதுமை அவல் வெஜிடபிள் இட்லி செய்து பாருங்க!

பால் அல்வா செய்முறை:

milk halwa recipe

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து ஏடு விழாதபடி காய்ச்சி எடுக்க வேண்டும். இப்போது பால் நன்றாக சுண்டி திரண்ட பிறகு நெய் விட்டு நன்கு கிளற வேண்டும். இன்னொரு பக்கம் ஒரு பாத்திரத்தில் கற்கண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து பாகாக காய்ச்சி எடுத்து வைக்க வேண்டும். இப்போது இந்த கற்கண்டு பாகை சுண்டி இருக்கும் பாலில் சேர்த்து கிளற வேண்டும். இதனை கிண்டி கெட்டி பதம் ஆனவுடன் குங்குமப்பூவை பன்னீரில் அரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்பை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பால் அல்வா ரெடி. இதனை தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு கப் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் தேகம் கொழுத்து புஷ்டியாக உதவும்.

பாலில் உள்ள நன்மைகள்:

பால் ஒரு மிகச்சிறந்த சத்தான உணவு. புரதம், வைட்டமின் பி, கால்சியம், வைட்டமின் டி என நம் உடலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் பாலில் அதிக அளவு உள்ளன. ஆனால் இந்த பாலில் இரும்பு சத்தும் வைட்டமின் சி சத்தும் கொஞ்சம் குறைவு தான். பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்கள் உணவில் பால் சேர்ப்பது மிகவும் அவசியம். பாலில் அதிக அளவு கால்சியம் சத்து இருப்பதால் நம் எலும்புகளுக்கு உறுதி அளித்து வலிமையாக்க உதவும். மேலும் இது நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் வளரும் குழந்தைகளுக்கு அவரின் உணவுமுறையில் பால் சேர்ப்பது அவசியம். அவர்களுக்கு பிடித்த பூஸ்ட் ஹார்லிக்ஸ் அல்லது காம்பிளான் போன்றவை கலந்து குடித்து வரலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP