கோடை காலம் துவங்கிவிட்டால் போதும் நம்மில் பலரும் ஜூஸ், ஐஸ் கிரீம், மில்க்க்ஷேக் போன்ற குளுகுளு உணவுகளை தேட ஆரம்பித்து விடுவோம். கொளுத்தும் வெயிலுக்கு குளிர்ச்சியான ஜில் ஆன உணவுகளை சாப்பிடும் போது, ஆகா தேவாமிருதம் போல உணர்கிறோம். அனைவருக்கும் பிடித்த குறிப்பாக குழந்தைளுக்கு பிடித்த ஆரஞ்சு பழத்தை வைத்து ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: முட்டையில்லாத ரவா கேக் ரெசிபி டிப்ஸ்!
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. மேலும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆரஞ்சு பழம் சாப்பிடுவதினால் சருமம் பொலிவாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆரஞ்சு நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடல் எடை குறைய உதவும். அதேபோல இந்த பழத்தை சாப்பிடுவதால் இதய நோய்கள் ஏற்படாமல் பாதுகாத்து இதய ஆரோக்கியம் மேம்பட உதவும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com