herzindagi
rava cake making

Rava Cake Recipe: முட்டையில்லாத ரவா கேக் ரெசிபி டிப்ஸ்!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">உங்களுக்கு வெண்ணிலா எசென்ஸ் பிடிக்கவில்லை என்றால், இதற்குப் பதிலாக சாக்லேட் போன்ற வேறு பல எசென்ஸ்களையும் நீங்கள் கேக் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.</span>
Editorial
Updated:- 2024-02-27, 14:43 IST

கேக்குகளை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. சாக்லேட், வெண்ணிலா, பிளாக்கரண்ட், ரெயின்போ என விதவிதமான கேக்குகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் முட்டை சேர்க்கப்படுவதால் சைவ பிரியர்கள் பல நேரங்களில் கேக்குகளை விரும்பமாட்டார்கள். இதோ இவர்களுக்காக முட்டையில்லாத ரவா கேக் எப்படி செய்வது? என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.

easy cake recipes

மேலும் படிக்க: முள்ளங்கி ல சிப்ஸ் செய்ய முடியுமா? இதோ ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக!

ரவா கேக் செய்முறை:

  • ரவை- 1 கப்
  • தயிர் - அரை கப்
  • எண்ணெய் - அரை கப்
  • பால் - அரை கப்
  • சர்க்கரை- தேவையான அளவு
  • பேக்கிங் சோடா மாவு- அரை தேக்கரண்டி
  • எலுமிச்சை - சிறிதளவு
  • உப்பு - சிறிதளவு
  • தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

  • ரவா கேக் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், எண்ணெய் ஊற்றி கலந்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் அரை கப் பால் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து ஒரு கப் மற்றும்  அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்ந்து ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரவை கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்களிடம் மைக்ரோஓவன் இருந்தால் 170 டிகிரி செல்சியஸ் வைத்து 25 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
  • இல்லையென்றால் கவலை வேண்டாம், அடி கனமான குக்கர் அல்லது தவாவை 10 நிமிடங்கள் முன்னதாகவே சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ரவை கலவையை தனியாக பாத்திரத்தில் மாற்றி குக்கரில் வைக்கவும்.
  • காற்று புகாத அளவிற்கு 30 நிமிடங்கள் வேக வைத்த பின்னர், சர்க்கரை பாகு, வெண்ணிலா எசென்ஸ், எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்துக்கொண்டு, கேக்கின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். இதை 10 நிமிடங்களுக்கு அப்படியே மிதமான சூட்டில் வேக வைக்கவும். பின்னர் சிறிது நேரம் கழித்து கேக் ஆறியதும் சமமாக வெட்டி எடுத்தால் போதும் சுவையான ரவா கேக் ரெடி. 
  • ஒருவேளை உங்களுக்கு வெண்ணிலா எசென்ஸ் பிடிக்கவில்லை என்றால், இதற்குப் பதிலாக சாக்லேட் போன்ற வேறு பல எசென்ஸ்களையும் நீங்கள் கேக் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிச்சயம் உங்கள் குழந்தைகள் இந்த கேக்குகளை வேண்டாம் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

rava cake recipes

மேலும் படிக்க: தென்னிந்திய வாழைப்பழ அல்வா எளிதில் செய்வது எப்படி?

அப்புறம் என்ன? இனி நீங்களும் உங்களது வீடுகளில் மைக்ரோஓவன் இல்லாமலும், முட்டை சேர்க்காமலும் செய்யக்கூடிய கேக்குகளை செய்ய ஆரம்பியுங்கள். அதிலும் பள்ளி முடித்துவிட்டு வீடுகளுக்கு வரும் குழந்தைகள் கடைகளில் வாங்கும் மிட்டாய் மற்றும்  சாக்லேட்டுகளை நிறுத்த வைப்பதற்கும் இந்த ரவா கேக் ரெசிபி நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com