Independence Day Recipe: மெத்தென்று பஞ்சு போல மூவர்ண ரவா இட்லி... சுதந்திர தின ஸ்பெஷல் ரெசிபி

இன்றைய ரெசிபியில் காலை உணவாக நீங்கள் தயாரிக்கக்கூடிய டிரைலர் இட்லி செய்வதற்கான எளிய வழியை பார்க்கலாம். 

tricolour idli card

சுதந்திர தினத்தில் புதிதாக ஏதாவது செய்ய நினைத்தால் நீங்கள் மூன்று வண்ண இட்லி தயார் செய்யலாம். சொல்லப்போனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இட்லியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் இது காலை ஒரு நல்ல ஹெல்த்தி உணவாக இருக்கிறது, அது மட்டும்மின்றி சட்னி, சாம்பாருடன் பரிமாறப்படும் போது மிகவும் ருசியாக இருக்கும். ஆகஸ்ட் 15 அன்று இட்லி செய்ய நினைத்தால் இந்த மூவர்ண இட்லியை சேர்க்கலாம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

மூவர்ண இட்லி செய்முறை

  • மூவர்ண இட்லி செய்ய முதலில் ஒரு கிண்ணத்தில் ரவா, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • சிறிது நேரம் அதை நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
tricolour rava idli
  • இப்போது கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சிறிது வதக்கவும்.
  • பிறகு ரவா கலவையை அதில் சேர்த்து நன்கு கலக்கவும் அதன்பிறகு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும்.
  • மூவர்ணக் கொடியின் வடிவத்தை பெற மாவை மூன்று பகுதிகளாகப் பிரித்து, வெள்ளை, பச்சை மற்றும் ஆரஞ்சு ஃபுட் கலரை மாவில் சேர்த்து கலக்க வேண்டும்.

tricolour idli with side dish

  • பிறகு இட்லி செய்யப்படும் பாத்திரத்தில் மாவை ஊற்றி 10 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
  • சுவையான மூவர்ண இட்லி தயார். ரெடியான இட்லியை சூப்பரான பச்சை சட்னி மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும்.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் தக்காளியை இப்படி சேமித்து வைத்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது

எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit- Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP