ஆகஸ்ட் 15 என்று சொன்னாலே நம் நினைவுக்கு முதல் வருவது சுதந்திர தினம் நாள். இந்திய சுதந்திர தினம் சாதாரணமாக கிடைத்தது அல்ல பல ஆயிரக்கணக்கான தியாகிகள், புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றியின் மூலமாக கிடைக்க பெற்றது. இன்று இந்தியாவில் சுதந்திர காற்றைச் சுவாசித்துக்கொண்டு இருக்கிறோன் என்றால் அதற்கு முதல் காரணம் என்றால் தேசிய தலைவர்களும், போராட்ட வீரர்கள் தான் காரணம்.
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி நமது நாட்டிற்கு சுதந்திர தினம் கிடைத்தது என்பது நமது அனைவருக்கும் தெரியும். நாட்டிற்காக உயிர் தாயகம் செய்த தலைவர்களையும், 200 ஆண்டுக்காலமாக ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த நமது நாடு விடுதலை அடைந்ததைக் கொண்டாடும் வகையிலும் இந்த பொன்னான தினத்தை கொண்டாடுகிறோம். ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த நாட்களில், நமது தேசத்தலைவர்கள் வீறுகொண்டு எதிர்த்து பல புரட்சிகள், கிளர்ச்சி மற்றும் போர்களை நடத்து இந்த வெற்றியை கண்டுள்ளனர். சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் மனதில் வைத்து தனது இன்னுயிரையும் துரந்த மகன்களின் தீயக உள்ளங்களையும், அவர்கள் போராடிப் பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் அந்நாளில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
மேற்கே பாக்கிஸ்தான், கிழக்கே வங்காள தேசம் என பெருவாரியான பரப்பளவைக் கொண்டு ஒரே நாடாக இருந்ததுதான் இந்தியா. மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நாட்டை தென்னிந்தியாவைச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து அவர்கள் புகழை ஓங்கச்செய்து இருந்தனர். மன்னர் ஆட்டியைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள், டில்லி சுல்தான் மற்றும் தக்கணத்து சுல்தான், விஜயநகர பேரரசு, முகலாயப் பேரரசு, மராத்தியப் பேரரசு, துரானி பேரரசு மற்றும் சீக்கிய பேரரசு என இவர்கள் நமது நாட்டும் வலங்களை விரிவுபடுத்துவதிலிருந்தனர்.
விஜயநகர பேரரசு காலத்தில் நமது நாட்டில் முதல் முதலாக வந்தவர் போர்ச்சுகீஸ் சேர்ந்த வாஸ்கோ ட காமா. வாஸ்கோ ட காமாவால் இந்தியாவில் உணவுக்குச் சுவை சேர்க்கும் மசாலா பொருட்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள் தங்கள் நாடுகளில் விற்பனை செய்ய விரும்பி கோழிக்கோடு துறைமுகம் 1498 ஆண்டு வந்து இறங்கினர். ஆனால் அவர்கள் இந்தியாவில் அவர்களின் அரசியல் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினர். 1757ல் இந்தியாவில் பிரிட்டிஷ் காரர்கள் வணிகம் செய்ய வந்து ஈஸ்ட் இந்தியா கம்பெனியை உருவாக்கி, அவர்கள் நாட்டில் உருவாக்கிய பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவைப் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, இந்தியர்களை அடிமையானவே நடத்த தொடங்கினர். இதனால் எழுந்த கிளர்ச்சியால் இந்தியாவிற்குச் சுதந்திர தினம் பிறந்தது.
1857 ஆண்டு இந்தியக் கழகம் என்ற இயக்கத்தை முகலாயப் பேரரசர் பகதூர் சா சஃபார் உருவாக்கினார். இதுவே முதல் இந்திய போர் என்று சொல்வர்கள். அதன்பிறகு பிரிட்டிஷ் அரசால் நாடுகடத்தப்பட்டார். இதை கண்டு நமது இந்தியர்கள் அஞ்சி நடுங்காமல் பல போராட்டங்கள், கிளர்ச்சிகள் செய்துக்கொடே இருந்தனர். பாலகங்காதர திலகர் முதல் இந்தியத் தேசியவாதியாக இருந்து சுயராஜ்ஜியத்தை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு காந்தி இந்தியாவிற்கு வந்த பிறகு 1920ஆம் ஆண்டில் கிளாபார், ஒத்துழையாமை இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் போன்றவை உதயமானது. இதன் பிறகு காந்தி முதல் சத்திய கிரக இயக்கத்தைத் தொடங்கினார். இதனால் 6 ஆண்டுகள் காந்தி சிறை தண்டனை கொடுக்கப்பட்டது, 2 ஆண்டுகளில் வெளியே வந்தார். அமைதியால் மட்டுமே சுதந்திரத்தைப் பெற முடியும் என்று நினைத்த காந்தி 1930 ஆம் ஆண்டில் தண்டி யாத்திரை என்கிற உப்பு சத்திய கிரகத்தைச் செய்தார். அதன்பிறகு 1940ல் தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942ல் வெள்ளையனே வெளியேறு போன்றவை நிறைவேற்றப்பட்டது. 1943ஆம் ஆண்டில் நேதாஜி இந்திய ராணுவத்தை ஜப்பான் உதவியுடன் மீட்டார். இந்த அனைத்து போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி போல் 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தது.
கடுமையான போராட்டம் மூலம் கிடைத்த இந்த வெற்றியை ஆண்டு தோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பெருமைமிகுந்த நாளாக இருந்து வருகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com