mango sweet

Mango Phirni Recipe: ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் மாம்பழ பிர்னி செய்வது எப்படி?

 ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் மாம்பழ பிர்னி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-04-01, 14:49 IST

வட இந்தியாவில் பெரும்பாலான விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு வகை இந்த பிர்னி. இது பார்ப்பதற்கு பாயாசம் போலவே இருக்கும். அதே போல ரம்ஜான் காலத்தில் இந்த பிர்னி மிகவும் பிரபலம். பால், ட்ரை புரூட்ஸ், பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகள் வைத்து செய்வதால் இந்த இனிப்பு வகை மிகவும் சுவையாகவும் நம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இந்த பிர்னி செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கலாம். குறைந்தது ஒரு மணி நேரம் ஆவது வேண்டும். இந்த வரிசையில் கோடை வெயிலுக்கு சுவையான மாம்பழ பிர்னி செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

சுவையான மாம்பழ பிர்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • பால் ஒரு லிட்டர் 
  • கால் கப் பாஸ்மதி அரிசி 
  • கால் கப் சர்க்கரை 
  • ஏலக்காய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன் 
  • ரோஸ் வாட்டர் ஒரு டேபிள் ஸ்பூன் 
  • பிஸ்தா துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன் 
  • பாதாம் துண்டுகள் ஒரு டேபிள் ஸ்பூன் 
  • மாம்பழ விழுது 2 கப் 
  • மாம்பழ துண்டுகள் ஒரு கப்

சுவையான மாம்பழ பிர்னி செய்முறை:

mango phirni recipe ()

முதலில் தேவையான அளவு பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி ஒரு துணியின் மேல் போட்டு 10 நிமிடங்கள் பேன் காற்றில் ஆறவிடுங்கள். இப்போது இந்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதில் பொடித்த அரிசியை சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து பாலும் பொடித்த பாஸ்மதி அரிசியும் சேர்ந்து மிதமான சூட்டில் அரை மணி நேரம் நன்கு கலக்க வேண்டும். அரை மணி நேரம் பிறகு அரிசி வெந்தவுடன் மிக்ஸியில் அரைத்து வைத்த மாம்பழ விழுதை இதில் சேர்த்து கிளறி விடுங்கள். இப்போது தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க: சுவையான ஆரஞ்சு வெண்ணிலா ரைஸ் கீர் ரெசிபி!

இதனை பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்குப் பிறகு ஏலக்காய் தூள், ரோஸ் வாட்டர் மற்றும் அரை கப் மாம்பழ துண்டுகளை சேர்த்து கலக்கவும். பின்னர் இறுதியாக பாதாம், பிஸ்தா துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி விட்டு இறக்கினால் சுவையான மாம்பழ பிர்னி தயார். இப்போது இதனை சிறிது நேரம் சூடு ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைத்து எடுத்து பரிமாறுங்கள். கொளுத்தும் கோடை வெயிலுக்கு ஜில்லான மாம்பழ பிர்னி சாப்பிடுவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com