kambu recipe

Kambu Laddu Recipe: சுவையான கம்பு லட்டு செய்வது எப்படி?

வீட்டில் எளிய முறையில் ஆரோக்கியம் நிறைந்த சுவையான கம்பு லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-04-02, 15:00 IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு இனிப்பு வகை இந்த கம்பு லட்டு. நம் உடலுக்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களும் இந்த கம்பில் நிறைந்துள்ளது. நம்மில் பலருக்கும் இரவில் உணவு சாப்பிட்ட பிறகு அல்லது மதிய உணவு சாப்பிட்ட பிறகு ஒரு இனிப்பு வகை சாப்பிடும் பழக்கம் இருக்கும். அந்த இனிப்பு வகையை ஆரோக்கியமாக வீட்டில் செய்து சாப்பிட்டால் நம் உடலுக்கு நல்லது. இந்த வரிசையில் ஆரோக்கியமான சுவையான கம்பு லட்டு வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

சுவையான கம்பு லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

  • ரெண்டு கப் கம்பு மாவு 
  • ரெண்டு கப் வெல்லம் 
  • 10 பாதாம் 
  • 10 ஏலக்காய் 
  • 10 பிஸ்தா 
  • 10 முந்திரி 
  • 10 திராட்சை 
  • தேவையான அளவு எண்ணெய் 
  • தேவையான அளவு தண்ணீர்

மேலும் படிக்க: ரம்ஜான் ஸ்பெஷல் ஸ்வீட் மாம்பழ பிர்னி செய்வது எப்படி?

சுவையான கம்பு லட்டு செய்முறை:

maxresdefault () ()

முதலில் ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். இப்போது கொழுக்கட்டை வடிவில் அல்லது உருண்டை வடிவில் இந்த மாவை பிடித்துக் கொள்ள வேண்டும். இதற்கு பின்னர் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி இந்த உருண்டை பிடித்த கம்பு மாவை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து இது சூடு ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்து கொள்ள வேண்டும். மறுப்புறம் வேறு ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பாதாம், முந்திரி, திராட்சை, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் இப்போது பாதாம் பிஸ்தா முந்திரி ஏலக்காய் அனைத்தையும் சேர்த்த பொடிதாக அரைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த வெல்லப்பாகு தயாரானதும் நாம் மிக்சியில் அரைத்து வைத்த கம்பு மாவு மற்றும் பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை ஏலக்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். கடாயில் இந்த கலவை அடி பிடிக்காத வரை நன்று கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது இந்த மாவு கெட்டி படத்திற்கு வந்தவுடன் கையில் சூடு பொறுக்கும் வரை சிறு லட்டுகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இது சூடு ஆறியதும் பரிமாறினால் ஆரோக்கியமான சுவையான கம்பு லட்டு தயார். இதனை பிரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை சாப்பிட்டு வரலாம்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com