
கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தரும் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி பூசணி. இந்த பூசணியில் நம் உடலுக்கு தேவையான அணைத்து ஊட்டச்த்துக்களும் அதிக அளவு நிறைந்துள்ளது. பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த பூசணிக்காய் வைத்து ஒரு இனிப்பு வகை செய்து பாருங்கள். காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இந்த பூசணி கப்கேக்கை விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டில் இருந்தபடி எளிய முறையில் பூசணி ஓட்ஸ் கப் கேக் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முதலில் மைதா மாவு, சர்க்கரை, ஓட்ஸ், பேக்கிங் பவுடர், பட்டை பொடி இதை எல்லாம் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இப்போது ஒரு சின்ன கிண்ணத்தில் எண்ணெய், பால், பூசணிக்காய் மசித்தது சேர்த்து நன்றாக கலக்கவும். இதன் பிறகு மைதா மாவு கலவையையும் இந்த பூசணிக்காய் கலவையும் ஒன்றாக சேர்த்து நன்கு கிளற வேண்டும். இப்போது கப் கேக் மோல்டு எடுத்து அந்த கப்பில் இந்த மாவை ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் 520f வெப்பத்தில் இரண்டு நிமிடம் வைக்க வேண்டும். மைக்ரோவேவ் ஓவன் இல்லாதவர்கள் இதனை குக்கரில் தண்ணீர் ஊற்றி அதற்கு மேல் ஒரு பாத்திரம் வைத்து அதற்கு உள்ளே இந்த கப் கேக் வைத்து வேக வைக்கலாம். 20 நிமிடங்கள் இதை வேக வைத்து பரிமாறினால் சுவையான ஆரோக்கியமான பூசணிக்காய் ஓட்ஸ் கப் கேக் ரெடி.
இந்த பூசணிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதே போல நம் உடலில் ஏற்பட்டுள்ள புண்களை ஆற்ற தழும்புகளை நீக்க பூசணிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூசணியை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூசணிக்காயை விரும்பி சாப்பிடுவோருக்கு கண் பார்வை சிறப்பாக மேம்படும். நாம் உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காயை சேர்த்துக் கொள்வது உடலில் உள்ள எலக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவுகிறது. அதே போல காய்ச்சல், ஜலதோஷம், சளி போன்ற நோய்களை குணப்படுத்தவும் இந்த பூசணி மிகவும் நல்லது.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com