எடை குறைக்கும் முயற்சியில் உள்ள பெண்கள் தினசரி உணவில் பரங்கிக்காய் சேர்த்தால் உடல் எடை எளிதில் குறைய உதவும். இந்த பரங்கிக்காயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கண்களுக்கு நல்லது. அதே சமயம் நம் தினசரி உணவில் பரங்கிக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இது அடிக்கடி பசியை தூண்டும். நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பரங்கிக்காயை வைத்து வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: குழந்தைகளுக்கு பிடித்த அன்னாசி பழ ரசம் ரெசிபி!
முதலில் பாலை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பரங்கிக்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து அதனை சில நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய் துருவல் எடுத்து வேகவைத்த பரங்கிக்காயுடன் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு கிளற வேண்டும். பக்குவ நிலை வரும் வரை அடிபிடிக்காமல் இதனை நன்கு கிளறவும்.
அதே சமயம் உலர் திராட்சை, ஏலக்காய் பொடி, முந்திரி, பாதாம் பருப்பு ஆகியவற்றை நெய்விட்டு வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பரங்கிக்காயுடன் நெய் விட்டு நன்கு இளகி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, நெய்யில் வதக்கி வைத்திருந்த உலர் திராட்சை, முந்திரி, பாதாம் பருப்பை சேர்க்கவும். பாயாசம் கெட்டியாக இல்லாமல் பக்குவமாய் சிறுக சிறுக தண்ணீர் சேர்த்து கிளறி வந்தால் சுவையான பரங்கிக்காய் பாயாசம் தயார்.
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி இளக வைத்து துருவிய பரங்கிக்காய் சேர்த்து இலகி வருவது போல் செய்து கொள்ளவும். பின்னர் இதில் பால் சேர்த்து தொடர்ந்து கிளறவும். நன்கு குறைந்த கெட்டியாக வரும் வரை தொடர்ந்து கிளற வேண்டும். இதில் கூடுதலாக ஏலக்காய் பொடியை சேர்த்து தொடர்ந்து கிளறி விடுங்கள். அல்வா போன்ற அமைப்பு கிடைத்ததும் இதில் முந்திரி பாதாம் பருப்பை தூவ வேண்டும். இப்போது அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய பாத்திரத்தில் இதனை கொட்டி சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான பரங்கிக்காய் அல்வா ரெடி.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com