Pineapple Rasam: குழந்தைகளுக்கு பிடித்த அன்னாசி பழ ரசம் ரெசிபி!

குழந்தைகள் பழங்கள் சாப்பிட அடம்பிடித்தால் அன்னாசி பழத்தை வைத்து ரசம் செய்து பாருங்க

pineapple rasam recipe in tamil

பெரும்பாலான வீடுகளில் அன்னாசிப் பழம் வைத்து இனிப்பு வகை உணவுகள் சமைத்து பார்த்திருப்போம். அன்னாசிப் பழ கேக், அன்னாசிப் பழ அல்வா உள்ளிட்ட பல இனிப்பு வகை உணவுகளும் குழைந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அன்னாசிப் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் ஊட்டச்சத்து நிறைந்த அன்னாசிப் பழத்தை வைத்து ரசம் வைப்பது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அன்னாசிப்பழ ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

  • ஒரு அன்னாசிப்பழம்
  • ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்
  • அரை டேபிள்ஸ்பூன் மிளகு
  • 2 பச்சை மிளகாய்
  • ஒரு டேபிள்ஸ்பூன் நெய்
  • நெல்லிக்காய் அளவு புளி
  • அரை மூடி எலுமிச்சம்பழ சாறு
  • சிறிதளவு கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு

pineapple rasam

அன்னாசி பழ ரசம் செய்முறை:

  • முதலில் எடுத்து வைத்த 2 பச்சை மிளகாய் கீறி வைக்கவும். பிறகு புலியை தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கொத்தமல்லியை தண்ணீரில் கழுவி சிறிதாக நறுக்கி வைக்கவும்.
  • இப்போது அன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக கட் செய்து ஒரு கப் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மிளகு, சீரகத்தை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
  • பிறகு கலந்து வைத்த புளி தண்ணீரில் உப்பு, மிளகு, சீரகம், பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
  • ரசம் நன்றாக நுரைத்து வரும்போது மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்த அன்னாசிப் பழ சாற்றை சேர்த்து கிளறி விடுங்கள்.
  • பிறகு இதில் கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான அன்னாசிப்பழ ரசம் தயார்.

மேலும் படிக்க: சுவையான லெமன் கொத்தமல்லி போஹா ரெசிபி!

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்:

இந்த பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் எடை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதே போல அன்னாசி பழத்தில் குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் அமிலம் ஒன்று உள்ளது. இது அலர்ஜி எதிர்ப்பு தன்மை, உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் காயத்தை குறைக்கும் சக்தி கொண்டது. அன்னாசி பழத்தை சாப்பிட்டு வருவதினால் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து கிடைக்கும். மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் மற்றும் தொப்பை கொழுப்பை கரைக்க விரும்புவோர்கள் அன்னாசி பழத்தை தினசரி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இந்த அன்னாசி பழத்தில் கால்சியம் மற்றும் மாங்கனீசு சத்து நிறைந்துள்ளது. இதனால் நம் உடலில் உள்ள எலும்புகள் வலிமையாக உதவுகிறது. மேலும் அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின், தாது பொருட்கள் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP