herzindagi
image

அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து ஏன் சமைக்கிறோம் தெரியுமா?

அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து சமைக்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செரிமான பிரச்சனை சீராக இருக்கும்.
Editorial
Updated:- 2025-08-14, 21:21 IST

நமது வீடுகளில் சமைப்பதற்கு முன்னதாக கொஞ்ச நேரத்திற்காவது அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்திருப்போம். ஏன் இப்படி செய்கிறோம்? என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா? நிச்சயம் இருக்க மாட்டோம். நமது முன்னோர்கள் தெரிந்தோ அல்லது தெரியாமலோ நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் வகையில் பல விஷயங்களை மேற்கொண்டுள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் சமைக்கும் போது அரிசி மற்றும் பருப்பை ஊற வைக்கும் நடைமுறைகள். இன்றைக்கு ஏன் இப்படி செய்கிறோம்? இதனால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

அரிசி ஊற வைப்பதன் நன்மைகள்:

அரிசியை ஊற வைத்து கழுவி சமைக்கும் போது இதில் உள்ள பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் நமது உடலுக்கு ஜிங்க், கால்சியம், மெக்னீசியம், அயர்ன், சோடியம், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் தேவையான அளவு சேமித்துக் கொள்ள உதவுகிறது. இதில் ஒரு அளவு கூடினாலும் நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும்.இதோடு அரிசியை ஊற வைத்து சமைக்கும் போது ஒட்டாமல் உதிரி உதிரியாக வருவதோடு விரைவாக சமைக்கவும் உதவுகிறது.

மேலும் படிக்க: ஆட்டுக்கறியை மென்மையாகவும், விரைவாகவும் சமைக்க... இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..!

பருப்பு ஊற வைப்பதன் நன்மைகள்:

பருப்பு வகைகள் சாப்பிடுவதற்கு அனைவருக்கும் ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு வயிறு உப்பிசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் பருப்பை ஊற வைத்து சமைக்க வேண்டும். நாம் ஒவ்வொரு முறையும் ஊற வைத்து சமைக்கும் போது உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். பருப்பின் சுவையை அதிகப்படுவதோடு குழந்தைகள் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்குத் தீர்வாக அமைகிறது. இதோடு மட்டுமின்றி உடலுக்குத் தேவையான உறிஞ்சுதல், செரிமான மேம்பாடு, சமைப்பதன் சுவையை அதிகரிப்பது போன்ற பல்வேறு நன்மைகளையும் கொண்டுள்ளது.

அரிசி மற்றும் பருப்பை ஊற வைக்கும் நேரம்:

சமைப்பதற்காக அரிசி மற்றும் பருப்பை ஊற வைப்பது உடலுக்கு ஆற்றலை அளிக்கும் என்றாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேலாகா அதை ஊற வைக்கக்கூடாது. அப்படி வைக்கும் போது அனைத்து சத்துக்களும் வெளியேறிவிடும். குழப்பமாக உள்ளது. இதோ அதற்கான பதில் இங்கே. பொதுவாக சாதத்திற்கு அரிசி ஊற வைக்கும் போது 20 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்கள் ஊற வைத்தால் நல்லது. பருப்பை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்கலாம். சுண்டல், மொச்சை போன்ற பயறு வகைகளாக இருந்தால் இரவில் ஊற வைப்பது நல்லது. இனி ஒவ்வொரு முறையும் அரிசி மற்றும் பருப்பை ஊற வைத்து சமைக்கும் முன்னதாக ஏன் சமைக்கிறோம் என தெரிந்து செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com