herzindagi
celebration cake

Christmas cake recipes: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான கேக் ரெசிபிகள்!

வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் வாழைப்பழம், நட்ஸ் மற்றும் வெல்லம் போன்றவற்றை வைத்து கேக்குகள் தயார் செய்யலாம்..
Editorial
Updated:- 2023-12-15, 22:31 IST

உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்கள், இயேசு பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாட தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் வரப்போகுது என்றாலே வீடுகளை அலங்காரம் செய்வது போன்ற பணிகள் ஒருபுறம் இருந்தாலும், கேக்குகள் இல்லாமல் இந்த பண்டிகை நிறைவுறாது.

தங்களது வீடுகள் மற்றும் உறவினர்களுக்கு என்ன மாதிரியான கிறிஸ்துமஸ் கேக்குகளை செய்து தரலாம் என்ற திட்டம் ஒருபுறம் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வீட்டிலேயே கேக் செய்து கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட வேண்டும் என திட்டமிட்டிருந்தால் இதோ உங்களுக்கான சில கேக் ரெசிபிகள்..

மேலும் படிக்க: குளிர்காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய இந்திய பழங்களின் லிஸ்ட்!  

கிறிஸ்துமஸ் கேக் ரெசிபிகள்:

வாழைப்பழ கேக்:

banana cake

வீடுகளிலேயே எளிமையாக செய்யக்கூடிய ஆரோக்கியமான கேக் இது என்று கூறலாம்.

தேவையான பொருள்கள்:

  • வாழைப்பழம்- 2 அல்லது 3
  • சர்க்கரை - ஒரு கப்
  • பேக்கிங் பவுடர் - இரண்டு டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மைதா/ கோதுமை - 1 கப்

செய்முறை:

  • முதலில் மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • பின்னர் மற்றொரு பாத்திரத்தில் பால், வாழைப்பழங்கள் மற்றும் எண்ணெய் போன்றவற்றை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • இதையடுத்து இவை இரண்டையும் ஒன்றாக கட்டி இல்லாமல் நன்கு கலக்க வேண்டும்.
  • மிதமான வெப்பத்தில் ஒரு பாத்திரத்தை சூடாக்கிக் கொண்டு, கேக் செய்வதற்காக கால் கப் மாவை லேசாக தூவி விடவும். 
  • இறுதியில் கேக் கலவை பாத்திரத்திற்கு வைத்து பொன்னிறமாக மாறும் வரை காத்திருந்தால் போதும். சுவையான வாழைப்பழ கேக் ரெடி.

வால்நட் கேக்

dry fruits cake

தேவையான பொருள்கள்

  • மைதா மாவு - அரை கப்
  • சர்க்கரை - 1 கப்
  • முட்டை - 4
  • பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
  • வெண்ணிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
  • அக்ரூட் பருப்புகள் - 1 கப்
  • உப்பு - சிறிதளவு 

செய்முறை

  • முதலில் மாவு மற்றும்  பேக்கிங் பவுடரை கலந்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • முட்டை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு ப்ளென்டர் செய்துக் கொள்ளவும். சிறிது நேரத்திற்கு சர்க்கரையையும் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து நுரை வரும் வரை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதையடுத்து இந்த முட்டை கலவையுடன் பேக்கிங் பவுடர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  • பின்னர் இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதன் மேல் வால்நடஸ்களை தூவி  மைக்ரோவேவனில் 15 நிமிடங்களுக்கு வைத்தால் போதும் சுவையான வால் நட் கேக் ரெடி. 

 வெல்லம் கேக்: 

celebration jaggery cake

பண்டிகை நாள்களில் சர்க்கரை நோயாளிகள் முதல் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெல்லம் கேக்கை வீட்டிலேயே தயார் செய்துக் கொள்ளலாம். 

தேவையான பொருள்கள்:

  • வெல்லம் - 1 கப்
  • மைதா / கோதுமை மாவு - 1 கப்
  • பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
  • வெண்ணெய் - தேவையான அளவு
  • முட்டை - 1  

செய்முறை:

  • வெல்லம் கேக் செய்வதற்கு முதலில், வெல்லத்தை தண்ணீர் ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் வெல்லம் தண்ணீரை ஊற்றி அதனுடன் கோதுமை மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் முட்டை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கலந்து வைத்துள்ள கலவையையும் இதனுடன் சேர்த்துக் கலக்கிக்கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு பாத்திரத்தை சூடேற்றி இந்த கலவையை 15 நிமிடங்கள் வேக வைத்தால் போதும் சுவையான வெல்லம் கேக் ரெடி.

மேலும் படிக்க: விடுமுறைக் காலத்தில் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி? 


இதுப்போன்று நீங்கள் கேரட் கேக், ப்ளம் கேக் போன்ற பல வகைகயான கேக்குகளை வீட்டிலேயே செய்து கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com