மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்குவது என தெரியவில்லையா? எனில், இந்த பதிவு உங்களுக்கானது தான்!!!

நீங்கள் சுவையான, சிறந்த மாம்பழத்தை வாங்க விரும்புகிறீர்களா? எனில், இந்த பதிவை படித்தறிந்து பயன் பெறலாமே.

mango big
mango big

பழங்களின் ராஜா என்பது மாம்பழம் தான். வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, மார்க்கெட்டில் விதவிதமான மாம்பழம் வந்துக்கொண்டு தான் இருக்கும். மாம்பழத்தை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு பட்ஜெட் விலையில் வாங்கவும் முடியும். ஆனாலும், எல்லா மாம்பழமும் ஒரே தோற்றத்தை கொண்டிருப்பதால், மாம்பழத்தை பார்த்து வாங்க பலரும் சிரமம் கொள்கின்றனர். மேலும், நல்ல மாம்பழம் எதுவெனவும் பார்த்து வாங்குவது சற்று சிரமமாகவே உள்ளது. எனவே, மாம்பழம் வாங்கும்போது கீழ்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

mango

சில சமயம், மாம்பழத்தை வெளியில் இருந்து பார்க்கும்போது பிரெஷ்ஷாகவும், நல்லதாகவும் தெரியும். ஆனால், வெட்டி பார்த்தால் மிகவும் மோசமாக இருக்கும். ஒரு சிலர் தரமற்ற மாம்பழத்தை அதிக விலைகொடுத்தும் வாங்கி ஏமாறுவது உண்டு. இது போன்ற சூழலில், மார்க்கெட்டுக்கு மாம்பழம் வாங்க போகும்போது, கனிந்த, இனிப்பான சிறந்த மாம்பழத்தை வாங்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை இப்போது படித்தறிந்து பயன் பெறவும்.

மாம்பழம் வாங்கும்போது செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்

mango

  • மாம்பழம் வாங்கும்போது நிறத்தை பார்க்க வேண்டாம். மாம்பழத்தில் பல விதம் இருப்பதால், நிறம் என்பது மாறுபடும். அவை பச்சை, சிகப்பு, ஆரஞ்சு என பல நிறங்களில் காணப்படலாம்
  • எனவே நிறத்தை பொறுத்து உங்களால் மாம்பழத்தை தரம் பார்த்து வாங்க முடியாது
  • உங்களுக்கு இனிப்பான மாம்பழங்கள் வேண்டுமெனில், வாசனையை நுகர்ந்து பார்த்து வாங்கலாம். கனிந்த மாம்பழம், இனிப்பு வாசனையை கொண்டது.
  • அதனால் எப்போது மாம்பழம் வாங்க சென்றாலும், மாம்பழத்தின் நுனி தண்டின் அருகில் வரும் வாசனையை வைத்து வாங்கலாம்
mango
  • கனமாக இருப்பதை வாங்க வேண்டாம். ஏனெனில், பழுத்த பழம், பழுக்காத பழத்தை விட சற்று கனமாக இருக்கும்
  • எனவே, மாம்பழம் வாங்க செல்லும்போது கனமான பழங்களை வாங்க வேண்டாம்
  • கருத்த, புள்ளிகள் உடைய மாம்பழத்தை வாங்க வேண்டாம். அவ்வாறு இருப்பது, ஏற்கனவே கனிந்துவிட்டது. அதன் சுவை ஏற்கனவே குறைந்திருக்கும்
  • புளிப்பு அல்லது ஆல்கஹால் மணமுடைய மாம்பழத்தை தேர்வு செய்ய வேண்டாம்.
  • மாம்பழம் வாங்கும்போது, அதன் வகைகளை நினைவில் கொள்ளவும். ஏனெனில், அவை அனைத்துமே வித்தியாசமானவை

மாம்பழம் இனிப்பாக இருப்பதை அறிவது எப்படி?

mango

  • மாம்பழத்தின் வாசனை பொறுத்து அதன் சுவையை நம்மால் அறிய முடியும். மாம்பழம், கடுமையான வாசனையை கொண்டிருந்தால், அதன் சுவை உள்ளே கடுமையான இனிமையை கொண்டிருக்குமென அர்த்தமாகும்
  • ஒருவேளை மாம்பழம், எந்தவொரு வாசனையும் அற்று இருக்குமெனில், அதனை வாங்காமல் தவிர்ப்பது நல்லது
  • மாம்பழத்தில் ஓட்டை இருந்தாலோ, வெட்டப்பட்டிருந்தாலோ, அதையும் வாங்க வேண்டாம். ஏனெனில், அது போன்ற மாம்பழங்களின் உள்ளே பூச்சிகள் இருக்க வாய்ப்புள்ளது

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: shutterstock
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP