
நிறைய இடங்களுக்கு சென்று விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கும். குறிப்பாக, மலைப்பாங்கான இடங்கள் நிறைய பேருக்கு பிடித்தமான ஒன்றாக திகழ்கின்றன. அந்த வகையில், நீங்கள் கண்டு மகிழக் கூடிய வகையில் இருக்கும் சில மலைப்பாங்கான இடங்களை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
மூணாறு, கேரளா (Munnar, Kerala):
தேயிலைத் தோட்டங்களும், பனி படர்ந்த மலைகளும், அமைதியான சூரிய அஸ்தமனமும் மூணாறை ஒரு கனவு பயணமாக்குகிறது. மலை உச்சியில் இருந்து கீழே பார்க்கும் போது இந்தப் பகுதி புது விதமான ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். உங்கள் விருப்பப்படி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதற்கு இது நிச்சயம் ஏற்ற இடமாக இருக்கும்.
'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று அழைக்கப்படும் கூர்க், செழிப்பான காபி தோட்டங்கள், நீர்வீழ்ச்சி மற்றும் பனிமூட்டமான பகுதிகளால் வசீகரிக்கிறது. குறிப்பாக, சூரிய உதயத்தை இந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது புது விதமான அனுபவம் கிடைக்கும் என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: தனியாக பயணம் செய்வதில் விருப்பம் கொண்டவரா நீங்கள்? இந்தியாவில் அவசியம் பார்க்க வேண்டிய 5 இடங்கள்
சிக்மகளூர், கர்நாடகா (Chikmagalur, Karnataka):
காபி பிரியர்களின் சொர்க்கம் என்று இதனை கூறலாம். மரகத பச்சை நிறத்திலான தோட்டங்களும், மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகளும், கம்பீரமான முல்லையனகிரி சிகரமும் கொண்ட இந்த அமைதியான மலை நகரம், நிச்சயம் உங்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
நீலகிரி மலை ரயில் பயணத்தில் பல்வேறு இயற்கை காட்சிகளை நீங்கள் காணலாம். இங்கு இருக்கும் ரோஜா தோட்டங்கள் பலருக்கு விருப்பமான ஒன்று. ஊட்டியில் உள்ள பனிமூட்டமான மலைகளும் ஏரிகளும் நிச்சயம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் படிக்க: தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க மின்சார ரயில் திட்டம்; எந்தெந்த ஊர்களுக்குத் தெரியுமா?
அடர்ந்த காடுகள், எடக்கல் குகைகள் மற்றும் கண்கவர் சிகரங்கள் ஆகியவை வயநாட்டின் கிராமிய அழகை வரையறுக்கின்றன. மூங்கில் படகு சவாரி மற்றும் வனவிலங்கு காட்சிகளை சேர்த்து, இதை ஒரு இயற்கையான சாகச பயணமாக நீங்கள் அனுபவிக்கலாம்.
'தெற்கின் சிரபுஞ்சி' என்று அழைக்கப்படும் ஆகும்பே, காடுகள், துடிப்பான சூரிய அஸ்தமனம் மற்றும் மறைந்திருக்கும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்த பகுதி ஆகும். புகைப்பட கலைஞர்கள் விரும்பும் அனைத்து இயற்கை சிறப்பம்சங்களும் இங்கு ஒன்றாக உள்ளது.
நட்சத்திர வடிவிலான ஏரிகள், பைன் காடுகள் மற்றும் பனி மூடிய பள்ளத்தாக்குகள் கொடைக்கானலை சிறந்த பயணத்திற்கு ஏற்ற இடமாக்குகின்றன. மலைகள் மற்றும் மேகங்களின் பரந்த காட்சிகளை படமெடுக்க மறந்துவிடாதீர்கள்.

இங்கு இருக்கும் தேயிலைத் தோட்டங்கள், வளைந்து செல்லும் சாலைகள் ஆகியவை கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். முற்றிலும் பசுமையாக காட்சி அளிக்கும் இந்தப் பகுதி, இயந்திரதனமான வாழ்க்கையில் இருந்து சற்று இடைவெளி எடுக்க உதவுகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com