பதினாறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை மையங்களில் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது வேளாங்கண்ணி புதிய ஆரோக்கிய அன்னை பேராலாயம். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பசிலிக்காவைச் சுற்றி நடந்த அற்புதங்களை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வேளாங்கண்ணி பேராலய திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றுடன் துவங்கிய இத்திருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பத்து நாள்கள் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முக்கியத்துவம் மற்றும் பேராலயத்தில் சிறப்பம்சங்கள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
வேளாங்கண்ணி மாதா கோவிலின் சிறப்பம்சங்கள்:
இந்துக்கள் என்றால் கோவிலுக்குத் தான் செல்ல வேண்டும். கிறிஸ்தவர்கள் பேராலயத்திற்கும் இஸ்லாமியர்கள் என்றால் மசூதிக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மாற்றியமைக்கும் புனித தலங்களில் முக்கியமானதாக விளங்கி வருகிறது வேளாங்கண்ணி மாதா கோவில். ஜாதி, மதம் கடந்து அனைத்து மதத்தினரும் வரக்கூடிய ஆலயங்களில் ஒன்று. இங்கு வந்து சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக எதையாவது நினைத்து வேண்டிச் சென்றால், அடுத்த முறை வருவதற்குள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தருகின்றனர்.
அதிலும் புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் 10 நாள்கள் திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் வருகைப் புரிவது வழக்கம்.
தேங்காய் உடைத்து வழிபடுதல்:
தேவாலயங்கள் என்றாலே மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வழிபடுவார்கள் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் மற்ற பேராலயங்களைப் போன்றில்லாமல், வேளாங்கண்ணி மாதா கோவிலில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். தேங்காய் உடைக்கும் பழக்கம் இங்கு மட்டும் உண்டு என்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. இதோடு மட்டுமின்றி வேண்டிய வரம் நிறைவேற வேண்டும் என்பதற்காக பாதயாத்திரையாக பக்தர்கள் வருகை புரிவார்கள். கோவிலுக்கு முட்டிப்போட்டுக் கொண்டு செல்வதும் இப்போதும் நடைமுறையில் உள்ளது.
10 நாள்கள் நடைபெறும் திருவிழா சமயங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கொங்கனி மராத்தி போன்ற பல்வேறு மொழிகளில் தினசரி திருப்பழிகள் நடைபெறும். தங்களது மொழிகளில் நடைபெறும் திருப்பழிகளைக் கேட்கும் யாத்ரீகர்களுக்கு மன நிறைவாக வழிபாடு மேற்கொள்வார்கள்.
கோவில் வரலாறு:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வங்கக் கடற்கரையோரம் அமைந்துள்ளது புனித ஆரோக்கிய மாதா பேராலயம். கடும் புயலில் சிக்கிய போர்ச்சுக்கீசிய மாலுமி கரை சேர உதவியது, தயிர் விற்ற மாற்றுத்திறனாளிக்கு கால் குணமாக்கியது, பால் விற்கும் சிறுவனுக்குக் காட்சி தந்தது என 16 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதங்களால் ஆரோக்கிய மாதா மீதான பக்தி பரவத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன.
Image credit - Instagra
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation