Waterfalls in Tamilnadu : தமிழ்நாட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சிகள் விசிட் அடிக்க தயாராகுங்கள்

குடும்பத்துடன் சென்று உற்சாகமாய் குளியல் போட தமிழ்நாட்டில் இருக்கும் நீர்வீழ்ச்சிகள் குறித்து இங்கே பார்க்கலாம். கோடை காலத்தில் குடும்பத்துடன் சென்று கண்டுகளியுங்கள்.

Sreeja Kumar
list of waterfalls

மலையுச்சியிலிருந்து ஆர்ப்பரித்து விழும் அருவிகளை பார்த்தால் யாருக்கு தான் குளிக்க பிடிக்காமல் போகும். இயற்கையின் அதிசயங்களில் நீர்வீழ்ச்சிகளும் ஒன்று. எல்லா நீர்வீழ்ச்சிகளிலும் குளிக்க முடியுமா? என்றால் அது சாத்தியமில்லை. மலையின் உச்சியிலிருந்து பாறையில் கொட்டு சில நீர்வீழ்ச்சிகளை ரசிக்க மட்டுமே முடியும். தூரத்தில் நின்றப்படி பார்த்து அதன் அழகை கண்டு வியக்கலாம். அதே நேரம் குளித்து ஆட்டம் போடவும் இயற்கையின் வரப்பிரசாதமாக சில அருவிகள் உள்ளன.

அதுக் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் குளிக்க ஏதுவான நீர்வீழ்ச்சிகள் என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். சம்மர் சீசனும் தொடங்கி விட்டதால் இந்த நேரத்தில் சுற்றுலா சென்றால் படு ஜோராக இருக்கும் என நினைப்பவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இந்த முக்கியமான நீர்வீழ்ச்சிகளுக்கு சென்று வரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தனுஷ்கோடி சுற்றுலா.. விசிட் செய்ய வேண்டிய இடங்கள்

ஓகேனக்கல்

'இந்தியாவின் நயாகரா' என அழைக்கப்பரும் ஓகேனக்கல் அருவி தர்மபுரி மாவட்டத்தில் இருக்கிறது. ஒரு அருவியாக இல்லாமல், பல அருவிகள் ஒன்று சேரும் சங்கமமாக உள்ளது. தண்ணீரில் நன்கு குளியல் போட வேண்டும் என நினைக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஓகேனக்கல் சொர்க்கபுரியாக திகழ்கிறது. ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலா செல்ல சிறந்த இடமாக இது உள்ளது.

குரங்கு நீர்வீழ்ச்சி

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இங்கு குளிப்பதே தனி ஆனந்தத்தை தரும். குரங்கு அருவி பொள்ளாச்சியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சென்று வரலாம். குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல ஏற்ற மாதங்கள் அக்டோபர் மற்றும் மார்ச்.

best water falls list

குற்றாலம்

அறிமுகமே தேவைப்படாத இடம். தென்காசிக்கு அருகில் இருக்கும் குற்றாலத்திற்கு உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரதான அருவியான பேரருவி 60 அடி உயரத்திலிருந்து விழுகிறது. இதில் குளிக்கும் போது தலை முதல் கால் வரை இருக்கும் அனைத்து உடல்வலிகளும் நீங்குகின்றன. குற்றாலத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் நீர்வரத்து அதிகமாகும்.

திருமூர்த்தி அருவி

உடுமலைப்பேட்டைக்கு அருகில் இருக்கும் இந்த அருவில் குடும்பத்துடன் சென்று வர மிகச் சிறந்த சுற்றுலாதலமாகும். இக்கோயிலுக்கு அருகே ஓடை ஒன்று பல காலமாக வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் குளிக்கவும் பாதுகாப்பான இடமாக உள்ளது. இந்த கோடை காலத்தில் கட்டாயம் சென்று வரலாம்.

falls in  tamilnaduj

சுருளி அருவி

தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி தமிழ்நாட்டில் இருக்கும் மிகச் சிறந்த நீர்வீழ்ச்சிகளில் ஒன்று. இங்கு நீர்வரத்து ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படும். அருவியை சுற்றிலும் மொத்த 1000 லிங்களும் உள்ளன. கோடை காலத்தில் குடும்பத்துடன் சென்று வர சுருளி அருவி மிகச் சிறந்த தேர்வு.

இந்த பதிவும் உதவலாம்:மகாபலிபுரத்தில் சுற்றி பார்க்க வேண்டிய 5 சுற்றுலா இடங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

Disclaimer